sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்திய மாணவர்களுக்கு ஜப்பான் பல்கலைகள் சிறந்த இலக்கு!

/

இந்திய மாணவர்களுக்கு ஜப்பான் பல்கலைகள் சிறந்த இலக்கு!

இந்திய மாணவர்களுக்கு ஜப்பான் பல்கலைகள் சிறந்த இலக்கு!

இந்திய மாணவர்களுக்கு ஜப்பான் பல்கலைகள் சிறந்த இலக்கு!


மார் 20, 2014 12:00 AM

மார் 20, 2014 12:00 AM

Google News

மார் 20, 2014 12:00 AM மார் 20, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் முதல் மனித ஐ.பி.எஸ்., செல்களை கண்டறிந்ததற்காக, ஜப்பானிய விஞ்ஞானி ஷின்யா யமன்காவிற்கு, மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜப்பானியர்களின் சாதனைகளுக்கு மேலே சொன்னது ஒரு சிறு உதாரணம்தான்.

கழிவு மேலாண்மை, வேளாண்மை, ரோபா தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் பொறியியல் மற்றும் நியூக்ளியர் பொறியியல் உள்ளிட்ட பல்வேறான துறைகளில், ஜப்பான் நாடு முன்னோடி தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலையில், தொழில்நுட்பத்திற்கு பெயர்பெற்ற ஜப்பான் நாட்டின் பட்டப் படிப்புகளை, ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு இந்திய மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

ஆங்கில வழி படிப்புகள்

ஜப்பானிய பல்கலைகள், இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்.டி., ஆகிய பல நிலைகளிலான பட்டப் படிப்புகளை ஆங்கில வழியில் வழங்குகின்றன. எனவே, அந்நாட்டில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கு, வெளிநாட்டு மாணவர்கள் இனிமேல் மொழியை ஒரு தடையாக நினைக்க வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்ப செயல்பாடுகள் நேரடியான அம்சங்களைக் கொண்டவை. அதேசமயம், படிப்பைப் பொறுத்து, நுழைவுத் தேர்வும் இடம் பெறலாம். வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தங்களின் டோபல் தேர்வு மதிப்பெண்களை சமர்ப்பிக்க வேண்டும். அதேசமயம், GRE மற்றும் GMAT ஆகிய தேர்வுகளின் மதிப்பெண்கள் தேவை என்றாலும், அவற்றை சமர்பிக்க வேண்டும்.

வழங்கப்படும் படிப்புகள்

பாரம்பரிய முறையிலான பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புகளைத் தாண்டி, பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், டிசைன், மீடியா, மேலாண்மை மற்றும் சட்டம் ஆகிய துறைகள் தொடர்பான Interdisciplinary படிப்புகளும் வழங்கப்படுகின்றன. அந்தப் படிப்புகள், இன்றைய உலகின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் வழங்கப்படுகின்றன.

மேலும், பொதுக் கொள்கை, நிர்வாகம், சுற்றுச்சூழல் படிப்புகள், சர்வதேச வணிகம் மற்றும் ஜப்பான் நாட்டின் இன்றைய கலாச்சாரம் ஆகிய துறைகளில், மானுடவியல் படிப்புகளும் ஆங்கில வழியில் வழங்கப்படுகின்றன. இதுதொடர்பான தகவல்களுக்கு www.uni.international.mext.go.jp/course/ என்ற இணையதளம் செல்ல வேண்டும்.

நிதியுதவி மற்றும் ஸ்காலர்ஷிப்

பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஜப்பானிய பல்கலைகளின் கல்விக் கட்டணம் குறைவே. ஜப்பானிய அரசாங்கம், பல்கலைகள், கார்பரேஷன்கள், ஜப்பானிய மாணவர் சேவைகள் அமைப்பு(JASSO) போன்ற சங்கங்கள் ஆகியவை வழங்கும் பலவிதமான உதவித்தொகை திட்டங்கள், ஒரு மாணவரின் வாழ்க்கை செலவினத்தை ஈடுகட்ட உதவுகின்றன.

திறமையுள்ள இந்திய மாணவர்கள், முழு அளவிலான உதவித்தொகை திட்டங்களைப் பெறும் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. மெரிட் அடிப்படையில், சிறந்த மாணவர்களுக்கு, முழு கல்விக் கட்டணம் தள்ளுபடி, மாதாந்திர உதவித்தொகை மற்றும் அனைத்துவிதமான செலவுகளையும் சமாளிக்கும் வகையிலான allowance ஆகிய சலுகைகளைப் பெற, அரசாங்கம் மற்றும் பல்கலைகள் ஆகியவை பரிந்துரை செய்யும்.

பணி வாய்ப்புகள்

இந்தியாவிலிருந்து புத்த மதம் ஜப்பானில் பரவத் தொடங்கிய காலம் முதலே, இரு நாடுகளுக்கும் இடைய குறிப்பிடத்தக்க உறவு இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக, ஜப்பானிய அரசாங்கம், இந்தியாவில் நடைபெறும் டில்லி, சென்னை, பெங்களூர் மற்றும் கொல்கத்தா நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்கள், தொழில்துறை வளாகங்கள், நீர் மேலாண்மைத் திட்டங்கள் மற்றும் சுகாதார மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்தல் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருகிறது.

மேலும், மேனுபேக்சரிங், பார்மசூடிகல், ஹெல்த்கேர், விளம்பரம், லாஜிஸ்டிக்ஸ், இன்சூரன்ஸ் மற்றும் வங்கி நடவடிக்கைகள் ஆகிய பல துறைகளில், ஜப்பானிய நிறுவனங்கள், தங்களின் இந்திய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வருகின்றன. எனவே, இத்தகைய ஒத்துழைப்பை சிறப்பாக கையாளும் மற்றும் முன்னேற்றும் வகையில், அதற்கேற்ற தகுதியான மனிதவளம் தேவை.

எனவே, ஜப்பான் பல்கலைக்கழகங்களிடமிருந்து அட்வான்ஸ்டு பட்டங்களைப் பெற்றுவரும் இந்திய மாணவர்கள், இத்தகையப் பணிகளுக்கு பொருத்தமானவர்கள். இந்தியாவில் இருக்கும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை, இந்தாண்டு, 820 என்பதிலிருந்து சுமார் 1,000 என்ற அளவிற்கு அதிகரிக்கப்படவுள்ளது. எனவே, ஜப்பானிய கலாச்சாரம் பற்றி அறிந்த இந்திய நபர்கள் அந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

நிபுணர்களுக்கான படிப்புகள்

பணி அனுபவம் உள்ள நிபுணர்களுக்கென்று பலவிதமான படிப்புகள் ஜப்பானில் உள்ளன. இந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம், டில்லி மெட்ரோ ரயில் கார்பரேஷனை சேர்ந்த சிவில் இன்ஜினியர், டோக்கியோ பல்கலையில், சிவில் இன்ஜினியரிங் முதுநிலைப் படிப்பில், ADB - Japan Scholarship பெற்று சேர இருக்கிறார்.

எனவே, தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய நிபுணர்களுக்கு(Professionals), மேலே சொன்னது போன்ற ஸ்பெஷலைஸ்டு படிப்புகள் மதிப்பு வாய்ந்தவை.

பொதுக் கொள்கை, நிர்வாகம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் இதர சிறப்பு துறைகளில், அட்வான்ஸ்டு பட்டங்களைப் பெற, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவை உதவித் தொகைகளை வழங்குகின்றன.

ஜப்பானில் ஒரு மாணவரின் வாழ்க்கை...

ஜப்பான் என்பது ஒரு நவீன தொழில்நுட்ப நாடு மட்டுமே என்பது மேலோட்டமாக பலருக்குத் தெரியக்கூடிய விஷயம். ஆனால், அது மிகவும் பழைய கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடு என்பது சிலருக்குத் தெரியாது. எவ்வளவுக்கெவ்வளவு அங்கே நவீன அம்சங்கள் இருக்கின்றனவோ, அதேயளவிற்கு புராதன அம்சங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பல புராதன சின்னங்களும், நல்ல பசுமையான கிராமப்புறங்களும் ஜப்பானில் பிரபலம். எனவே, அங்கே சென்று படிப்பது, ஒரு வெளிநாட்டு மாணவருக்கு இரட்டை அனுபவத்தை தரும்.

பல்கலைக்கழக கிளப்புகள் மூலமாக, ஒரு வெளிநாட்டு மாணவர், பாரம்பரிய ஜப்பானிய பெயின்டிங், அனிமேஷன் கலை, தேநீர் விழா, தற்காப்புக் கலைகள், அழகிய கையெழுத்துக் கலை, இசை மற்றும் இன்னபிற அம்சங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

மேலும், சம்பந்தப்பட்ட பல்கலைகளால் ஏற்பாடு செய்யப்படும் நாடு தழுவிய சுற்றுலாவிலும் கலந்துகொண்டு, சிறப்பான அனுபவத்தைப் பெற முடியும். உலகிலேயே மிகவும் குறைவான குற்றங்கள் நடக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. டோக்கியோ, ஒசாகா மற்றும் யோடோ போன்றவை பெரிய நகரங்களாக இருந்தாலும் பாதுகாப்பானவை. அங்கே, புல்லட் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளை எளிதாகப் பெற முடியும்.

ஜப்பானிய அரசாங்கம் வழங்கும் உதவித்தொகைகள்(MEXT)

எதற்காக?

ஜப்பானில் இளநிலை மற்றும் முதுநிலைப் படடப் படிப்பு மேற்கொள்வதற்கு.

நன்மைகள்

முழு கல்விக் கட்டண சலுகை, முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையான ரூ96,720 மற்றும் டாக்டோரல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையான ரூ.97,400 போன்றவை குறிப்பிடத்தக்கவை.

விதிமுறைகள்

இளநிலைப் படிப்பிற்கு, இந்த உதவித்தொகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதில், ஜப்பான் மொழிக் கற்றுக்கொள்வதற்கான கட்டாய காலஅளவும்(mandatory period) அடக்கம். இளநிலைப் பட்டதாரிகள் ஏப்ரல் மாதம் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தூதரகப் பரிந்துரை

ஏப்ரல் மாத நடுவில், இந்தியாவிலுள்ள ஜப்பான் தூதரகம், மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து, ஜப்பானில் வழங்கப்படும் முதுநிலைப் படிப்புகளுக்கான உதவித்தொகை விண்ணப்பப் படிவங்களை, தங்களின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும்.

விண்ணப்பதாரர்கள், அந்த ஆன்லைன் படிவத்தை பூர்த்திசெய்து, தேவையான இதர கூடுதல் ஆவணங்களுடன், கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், நேர்முகத் தேர்வுக்காக, டில்லிக்கு அழைக்கப்படுவார்கள். அதன் முடிவுகள் ஜுலை மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

பின்னர், தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களின் விருப்பமான பல்கலைக்கு விண்ணப்பிக்கலாம். அப்போது, விண்ணப்பத்தில், MEXT Scholar என்று குறிப்பிட வேண்டும். இதுகுறித்த விரிவான விபரங்களுக்கு www.in.emb-japan.go.jp/Education/Undergraduate_Student.html. என்ற இணையதளம் செல்லவும்.

பல்லைக்கழகப் பரிந்துரை

தகுதிவாய்ந்த மாணவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, கூடுதல் உதவித்தொகை விண்ணப்பம் தேவையில்லை (பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பம் மதிப்பாய்வு செய்யப்படும்).






      Dinamalar
      Follow us