sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான நல்ல பணி வாய்ப்பு

/

எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான நல்ல பணி வாய்ப்பு

எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான நல்ல பணி வாய்ப்பு

எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான நல்ல பணி வாய்ப்பு


பிப் 03, 2014 12:00 AM

பிப் 03, 2014 12:00 AM

Google News

பிப் 03, 2014 12:00 AM பிப் 03, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊதியம் மற்றும் பணித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், இன்றைய நிலையில், எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான சிறந்த பணி வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றிய தேடல் எழுகிறது.

* அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய, வங்கியியல் மற்றும் நிதித்துறை(Banking & Finance)

* வங்கிகளில் விற்பனை மற்றும் மார்க்கெடிங் பணிகள்

* இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதித்துறை பணிகள்

கன்சல்டன்சி

கன்சல்டன்சி துறை என்பது, அதிக வருமானத்தை தரும் மற்றொரு முக்கிய துறையாகும். இத்துறையில், பைனான்சியல் அனலிஸ்ட், மார்க்கெட் ரிசர்ச் மற்றும் ரிசர்ச் அனலிஸ்ட் பணி நிலைகள் மற்றும் விரைவாக விற்பனையாகக்கூடிய நுகர்வோர் பொருள் பிரிவு(FMCG) போன்றவை அடக்கம்.

கன்சல்டன்சி துறையில் நுழைவதற்கான தகுதிகள் பல்வேறாக மதிப்பிடப்படுகின்றன. இத்துறைக்கு, தனித்துவமான சிறப்பு தகுதிகள் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட வணிக பிரச்சினையைப் பற்றி புரிந்து கொள்ளுதல், வேறுபாடுகளை சகித்துக் கொள்ளல், நெருக்கடியான சமயத்தில் கையாளும் பொறுமை, சிறந்த தகவல் தொழில்நுட்ப திறன்கள், தனிப்பட்ட ஆளுமை மற்றும் தோற்றம், spreadsheet -களில் விரைவாக பணி செய்யும்  திறமை, தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன், எழுதும் திறன், பயணம் செய்வதற்கு தயாராக இருத்தல் மற்றும் பன்மொழி திறனைப் பெற்றிருத்தல் உள்ளிட்ட பல்வேறான தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மாஸ் கம்யூனிகேஷன் பட்டதாரிகள் மட்டும்தான் எம்.பி.ஏ., மீடியா மேனேஜ்மென்ட் படிப்பை மேற்கொள்ள முடியுமா?

மீடியா மேனேஜ்மென்ட் என்பது ஒரு பொதுவான பணி நிலையாகும். மீடியா தொழில் நிபுணர்களின் திறன்களை மேலாண்மை செய்யும் பணியாகும்.

இப்பணியானது, எழுத்து உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்ட, தீவிரமான பத்திரிக்கைத் துறை சிந்தனை கொண்ட நபர்களுக்கானதல்ல. இது ஒரு மேலாண்மை படிப்பு என்பதை நினைவில் கொள்ள வவேண்டும்.

மீடியா துறையில் உள்ள வணிக அம்சங்களை மேலாண்மை செய்வதே இப்படிப்பின் சாரம். மீடியா துறை மற்றும் அதன் இயக்கம் தொடர்பான வணிகம் மற்றும் நிதி அம்சங்களில் ஆர்வம் கொண்ட மாஸ் கம்யூனிகேஷன் பட்டதாரிகளுக்கு மீடியா மேனேஜ்மென்ட் படிப்பு மிகவும் பொருத்தமானது.






      Dinamalar
      Follow us