தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அசுர வளர்ச்சியில் ஹோட்டல் தொழில்

அசுர வளர்ச்சியில் ஹோட்டல் தொழில்

அசுர வளர்ச்சியில் ஹோட்டல் தொழில்


ஜூலை 10, 2011 12:00 AM

ஜூலை 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 10, 2011 12:00 AM ஜூலை 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் கணிப்பின்படி, அடுத்த 3 ஆண்டுகளில், இந்திய ஹோட்டல் துறையில் மொத்தம் 1 லட்சம் பயிற்சிபெற்ற நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவுக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குப் பிறகும், அத்துறை பணியாளர்கள் காட்டிய உழைப்பும், தன்னம்பிக்கையுமே அந்தத் தொழிலின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில்(டபிள்யு.டி.டி.சி) மற்றும் அக்சன்சர் ஆகியவை இணைந்து வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில், "இந்திய சுற்றுலா தொழில்துறையானது, வரும் 2018ம் ஆண்டில், 275.5 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்ச்சியடையும்" என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவிற்கு 50 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்ததுடன், உள்நாட்டிலேயே சுமார் 40 கோடி பேர் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஹோட்டல் தொழிலும் வளர்ச்சியடைந்துள்ளது. ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன்(எச்.ஆர்.ஏ), ஆய்வின்படி, இந்தியாவில், ஏறக்குறைய 1 லட்சம் ஹோட்டல் அறைகள் மேம்படுத்தப்படுகின்றன மற்றும் அந்த எண்ணிக்கைக்கு சமமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். ஹோட்டல்களில், லக்சரி, பட்ஜெட் மற்றும் பிசினஸ் என்று பல வகைகள் உள்ளன. தற்போது ஹோட்டல் துறை பெரியளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளாவிய பல ஹோட்டல் குழுமங்கள் பல இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளன. சூரத் மற்றும் அகமதாபாத் போன்ற சிறிய நகரங்கள்கூட பெரியளவில், இத்தொழிலில் வளர்ச்சியடைந்து வருகின்றன.

இத்தாலியன், மெக்சிகன் மற்றும் தாய்லாந்து வகை உணவுகளுக்கான சிறப்பு ரெஸ்டாரண்டுகள் வளர்ச்சியடைந்துள்ளன. மேலும் சிறியவகை ஹோட்டல்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வளர்ச்சியடைந்து வருகின்றன. சுற்றுலாத் துறையின் பலவித அம்சங்கள், இன்னும், வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன. எம்.ஐ.சி.இ(மீட்டிங், இன்சென்டிவ், கான்பெரன்ஸ் மற்றும் கண்காட்சி), சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, சாகச சுற்றுலா, ஆயுர்வேத சுற்றுலா மற்றும் பாரம்பரிய சுற்றுலா போன்றவை சுற்றுலா துறையில் வளர்ந்துவரும் வகைகளாகும். மேலும் விசா சேவைகள் மற்றும் சுற்றுலா மேலாண்மை போன்றவையும் வளர்ந்து வருகின்றன.

வளர்ந்துவரும் சுற்றுலாத் தொழில் மற்றும் ஹோட்டல் தொழில் மற்றும் திறமையான நபர்களுக்கானத் தேவை ஆகிய 3 அம்சங்களுக்கிடையே நேரடி தொடர்புகள் உள்ளன. இது ஒரு சேவை மனப்பான்மையுடன் கூடிய துறையாகும். இதில் பணிபுரியும் நபர்களுக்கு உடல் சக்தி, படைப்புத் திறன், ஆர்வம், லட்சியம் மற்றும் புத்தாக்கம் போன்றவை இருக்க வேண்டும். பிற வளமான துறைகளில் வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக இத்துறையிலும் சம்பளம் வழங்கப்படுவதால், இது பலருக்கும் ஒரு விருப்பமான துறையாக மாறியுள்ளது.

இத்துறை சார்ந்த கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பெருகி வருவதே, இத்தொழில் அடைந்துவரும் வளர்ச்சிக்கு ஒரு உதாரணம். இந்தத் தொழிலில், பரவலாகப் பயணம் செய்யும் வாய்ப்பும், பலவித கலாச்சாரங்களை சேர்ந்த மக்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஒருவர் இந்தத் துறையில் சாதிக்க வேண்டுமெனில், அவருக்கு இத்தொழிலின் மீது அதீத ஆர்வம் இருக்க வேண்டும். அந்தத் தொழிலிலிருந்து கிடைக்கும் ஒரு முழுமையான சந்தோஷத்திலிருந்தே அந்த ஆர்வம் உண்டாகிறது. இளைய தலைமுறையினர், இந்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இத்தொழிலில் ஈடுபட, பெரிய முதலீடு வேண்டுமென்பதில்லை. ஆனால் புதிய சிந்தனைகள் வேண்டும். இன்றைக்கு, பெரிய டிராவல் நிறுவனங்களின் முதலாளிகளாக இருப்பவர்களெல்லாம், ஒரு காலத்தில் அத்துறையில் சாதாரண பணியாளர்களாக இருந்தவர்கள்தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும். நல்ல பண்பு, சிறந்த விருந்தினர் சேவை, உலகைப் பற்யி பொதுவான விழிப்புணர்வு போன்றவை இத்துறை வெற்றிபெறுவதற்கான முக்கியப் பண்புகள்.

இத்துறையில் இளநிலைப் படிப்பை மேற்கொள்ள, மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும். பல ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் ஒரு முக்கிய பாடமாக உள்ளது. ஏனெனில் டிராவல் மற்றும் சுற்றுலா நிறுவனங்களால் இது வலியுறுத்தப்படுகிறது. பல சுற்றுலா கவி நிறுவனங்கள், எம்.பி.ஏ. உள்ளிட்ட பல துறைசார்ந்த முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன. இத்தொழிலில் பொறுமை அவசியம். பல சமயங்களில் ஆரம்பத்தில் குறைந்தளவே சம்பளம் கிடைத்தாலும், அடுத்த சில வருடங்களில் அதிக சம்பளம் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us