ஆக 04, 2011 12:00 AM
ஆக 04, 2011 12:00 AM
தற்போதைய இந்திய பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான துறை பயோ இன்பர்மேடிக்ஸ். ஜெனோம்கள், புரொட்டீன் மாலிகூல்கள் ஆகியவற்றில் டேட்டா அனலிசிஸ் எனப்படும் ஆய்வுக்காக இன்பர்மேஷன் டெக்னாலஜியை பயன்படுத்துவதைத் தான் பயோ இன்பர்மேடிக்ஸ் செய்கிறது. இந்தியாவில் இந்தத் துறை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது என்றாலும் இது அதிக வளர்ச்சியை உள்ளடக்கியுள்ளதாக வேலை வாய்ப்பு வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
புதிய மருந்து கலவைக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பார்மா கம்பெனிகள், ஆய்வில் ஐ.டி.,யை பயன்படுத்துவதற்கான முதலீட்டை அதிகரிப்பதில் ஆர்வத்துடன் உள்ளனர். மேக்ரோ மாலிகூல்களை ஆய்வு செய்வதில் தொடங்கிய பயோஇன்பர்மேடிக்ஸ் துறை, தற்போது மனித ஜெனோம் ஆய்வுத் திட்டத்திலும் அதிகம் பயன்படுகிறது. புதிய மருந்து தயாரிப்பதிலும் இது பயன்படுகிறது. பெரிய டேட்டாபேஸ்களை கையாள்வதற்கு பயோஇன்பர்மேடிக்ஸ் உதவுவதால் உயிரியல் ஆய்வுத் திட்டங்கள் வேகமாக நிறைவுறுகின்றன.
பயோடெக்னாலஜியிலும் ஐ.டி., துறையிலும் நிகழும் உயரிய தொழில்நுட்ப பயன்பாட்டை பயோஇன்பர்மேடிக்ஸ் இணைத்து செய்து முடிக்கிறது. எனவே தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்பில் முறையாகப் படித்தவருக்கும் திறன் பெற்றிருப்பவருக்கும் கடும் தேவை இருக்கிறது. மனிதர், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் ஜெனோம் வகைப்படுத்தப்படும் கட்டத்தை இத்துறை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இது முடிவுக்கு வரும்போது பயோ இன்பர்மேடிக்ஸ் துறை, வளர்ச்சியில் முக்கியமான கட்டத்திற்கு நகரும். அப்போது பயோ இன்பர்மேடிக்ஸ் முடித்திருப்பவருக்கான தேவையும் பலமடங்கு அதிகரிக்கும். நிறுவனங்கள் பயோஇன்பர்மேடிக்ஸில் முறையான படிப்பு மற்றும் பயிற்சி பெற்றிருப்பவர், இந்தியாவில் தற்போது தொடக்கத்திலேயே ஆண்டுக்கு குறைந்தது ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகின்றனர்.
இந்த படிப்பை முடிப்பவருக்கு, பெங்களூரூவில் உள்ள அஸ்ட்ரா செனகா ஆய்வு மையம், ஐதராபாத்திலுள்ள ஜி.வி.கே. பயோசயின்சஸ் மற்றும் டி.எஸ்.கியூ., பயோடெக், ஐதராபாத்திலுள்ள சென்டர் பார் செல்லுலர் அண்ட் மாலிகூலர் பயாலஜி மற்றும் புனேயிலுள்ள சிடாக் ஆகியவற்றில் தற்போது ரெடியாக வேலை வாய்ப்புகள் தரப்படுகின்றன.
தற்போது ஐ.டி., துறையில் முன்னணியில் உள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டி.சி.எஸ்., போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் பேட்டர்ன் ரிகக்னிஷன், கிளஸ்டரிங் டெக்னிக், புரொட்டியோமிக்ஸ் போன்ற பிரிவுகளில் கடுமையான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கின்றன.
