தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பேஷன் மற்றும் அலங்காரத் தொழில்துறை

பேஷன் மற்றும் அலங்காரத் தொழில்துறை

பேஷன் மற்றும் அலங்காரத் தொழில்துறை


ஆக 09, 2011 12:00 AM

ஆக 09, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 09, 2011 12:00 AM ஆக 09, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகளவில் பொருளாதார தேக்கநிலை இருந்தாலும், பேஷன் துறையானது, இளைய சமுதாயத்தின் எதிர்கால வாழ்விற்கு நம்பிக்கைத் தரும் விதத்தில் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடத்திலும் 20% வரை வளர்ந்துவரும் இத்துறையில், பயிற்சிபெற்ற நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

முக அலங்காரம் மற்றும் சிகை அலங்காரம் போன்றவை, ஒரு கதையம்சத்தை வெளிப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாகும். அலங்கார நிபுணர்கள், செயற்கை சாதனங்களை உபயோகப்படுத்தி, நடிகர்களின் உடலமைப்பையும், முக அமைப்பையும் மாற்றுகிறார்கள். ஒரு படம் மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் வணிகரீதியான படங்கள் மற்றும் பிறவகை தயாரிப்புகளின் அலங்கார அமைப்புகளுக்கு முதன்மை அலங்கார நிபுணரே பொறுப்பேற்கிறார். இவர், காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் சிகை அலங்கார நிபுணர் ஆகியோருடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி, கதாப்பாத்திரத்திற்கேற்ப ஒரு நடிகரை தயார் செய்கிறார்.

இவருக்கு துணையாக, மேக்-அப்(அலங்கார) உதவியாளர்கள், சிறப்புக் காட்சி நிபுணர்கள்(ஸ்பெஷல் எபெக்ட் எக்ஸ்பர்ட்) ஆகியோர் இருக்கிறார்கள். இவர், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்கிறார். மேலும், இவர், பழகுவதற்கு இனிமையானவராகவும், வியூகம் உள்ளவராகவும், அதிகநேரம் வேலை செய்யும் தன்மை உள்ளவராகவும், தனது தொழிலில் சிறந்த அறிவும், திறமையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். நீண்டகாலமாகவே, இந்தத் துறையில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம்.

பெரும்பாலான அலங்கார நிபுணர்கள், தங்களின் தொழிலை, சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில், மேக்-அப் உதவியாளர்களாகவே தொடங்குகிறார்கள். அதேசமயம், பொழுதுபோக்கு மற்றும் பேஷன் துறையில் நன்கு வளர்ச்சியடைவதற்கு, முறையானப் பயிற்சி அவசியம். பொதுவாக, இத்துறையில் பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும், டெல்லியிலுள்ள, மேக்-அப் ஸ்டுடியோ பயிற்சி மையம்(எம்எஸ்டிசி), இத்துறையில், உலகளவில் பயிற்சிபெற்ற ஒரு நிறுவனமாகும்.

அதேசமயம், வெளிநாடுகளில் உள்ள பயிற்சி மையங்களில், அமெரிக்காவின் மியாமி, நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சலிஸ் போன்ற நகரங்களிலுள்ள மையங்கள் புகழ்பெற்றவை. சிறந்தமுறையில் பயிற்சிபெற்ற அலங்கார நிபுணர்களுக்கு, திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரம், பேஷன் மற்றும் அழகுக்கலை மையங்கள் போன்றவற்றில் அதிகளவிலான தேவைகள் உள்ளன. இந்த வேலை வாய்ப்புகள் நிலையானவை. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டுடியோக்களில், ப்ரீலேன்சராக பணிபுரியும் ஒரு அலங்கார நிபுணர், நிரந்தர முறையில், ஒரு நாளைக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கிறார். இது ஒரு வளரும் மற்றும் சுறுசுறுப்பான தொழில்துறை.

திரைப்படம் மற்றும் பேஷன் தொழில்துறையானது, மிகவும் நிபுணத்துவம் கொண்டதாக மாறி வருகிறது. தற்போது நாடு முழுவதும், பேஷன் ஷோக்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இன்றைய நிலையில், அலங்கார நிபுணர்கள், ஒரு படைப்புத் திறனுள்ள நிபுணர்கள் என்ற அளவில் அதிகம் மதிக்கப்படுகிறார்கள். இன்றைய நிலையில், வேறுபல துறைகளில் பணிபுரியும் நிபுணர்கள், அந்தப் பணிகளை விட்டுவிட்டு, வருமானமும், சுவாரஸ்யமும், மதிப்பும் உள்ள இந்த பேஷன் துறையை நோக்கி வருகிறார்கள். எனவே, இத்துறையில் விருப்பமுள்ள படைப்புத்திறனும், அதிகநேரம் பணிசெய்யும் தன்மையும் உள்ள மாணவர்கள், தயங்காமல் இத்துறையில் ஈடுபடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us