தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புது வாழ்க்கை... புது நண்பர்கள்

புது வாழ்க்கை... புது நண்பர்கள்

புது வாழ்க்கை... புது நண்பர்கள்


ஆக 25, 2011 12:00 AM

ஆக 25, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 25, 2011 12:00 AM ஆக 25, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப் பருவம் முடிந்து, கல்லூரிக்கு பருவத்திற்கு செல்ல பலர் தயாராகி இருப்பீர்கள். "என்னுடைய கல்லூரிப் பருவம் என் வாழ்நாளில் முக்கியமான தருணம்' என பலர் கூற கேட்டிருப்போம்.

உங்களை ஊக்குவித்து, தாங்கிப் பிடிக்கும் நண்பர்கள் பலர் அங்கு தான் கிடைப்பர். அத்தகைய நண்பர்களை எவ்வாறு பெறுவது என்பது தான் முதல் நாள் கல்லூரிக்கு செல்வோரில் பலருக்கு கவலையை ஏற்படுத்தும். அதற்கு சில யோசனைகள்:

* வெளிப்படையாக பழகுங்கள்:
புதிதாக கிடைக்கும் நண்பர்களிடம் வெளிப்படையாக பழகுங்கள். உங்கள் மனதையும், எண்ணத்தையும் இதற்கு தயார் செய்து கல்லூரி நாட்களை சந்தோஷமாக்குங்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு எளிதில் மாறலாம்.

* முனைப்புடன் செயல்படுங்கள்:
எந்த செயலிலும் முனைப்புடன் செயல்படுங்கள். நட்பு வட்டாரத்தை அதிகப்படுத்துவதில், கவனம் கொள்ளுங்கள். 

* திட்டமிடுங்கள்:
புதிய நண்பர்களுடன் வெளி இடங்களுக்கு செல்லும் போது திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களின் நடவடிக்கைகள், அவர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் உள்ளவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* பழைய நண்பர்களை மறக்காதீர்கள்:
புதிதாக நண்பர்கள் கிடைத்ததும் பழைய நண்பர்களை மறந்து விடாதீர்கள். நண்பர்கள் கிடைப்பது அரிது. அவ்வாறு கிடைப்பவர்களை காலம் முழுவதும் நம்முடன் தக்கவைத்துக் கொள்ள எண்ணுங்கள்.

* சமூகத்துடன் பழகுங்கள்:
சுப நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், விழாக்களுக்கு நண்பர்களுடன் செல்லுங்கள். அவ்வாறு செல்வதால் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். பலவிதமான கலாச்சாரம், உணவு வகைகளை அறியலாம். 

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் உங்கள் நட்பு வட்டாரத்தை எளிதில் அடையலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us