தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/முக்கியத்துவம் பெறும் அருங்காட்சியக படிப்பு

முக்கியத்துவம் பெறும் அருங்காட்சியக படிப்பு

முக்கியத்துவம் பெறும் அருங்காட்சியக படிப்பு


செப் 22, 2011 12:00 AM

செப் 22, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 22, 2011 12:00 AM செப் 22, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்கள் மத்தியில் தற்போது கலை மற்றும் கலாச்சார படிப்புகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளதால், அருங்காட்சியகம், வரலாற்றுக் கலை, பாதுகாப்புத் துறைப் படிப்புளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பொதுமக்களை ஒன்றிணைக்கும் ஒரு இடமாகவும், அரசு அமைப்புகளால் பராமரிக்கப்படும் துறையாகவும் அருங்காட்சியகம் இருப்பதால் அது குறித்த படிப்புகளை விரும்பும் மாணவர்கள் தற்போது அதிகரித்துள்ளன.

அதுபோல, கலைக் கூடங்களுக்கும், வரலாற்று புகழ் மிக்க கலாச்சாரத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கலைப் படிப்புகளையும் மாணவர்கள் அதிக அளவில் விரும்பி சேர்ந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியக கல்வி மையத்தின் துணை வேந்தர் சி.வி. அனந்தபோஸ் கூறுகையில், பழம்பெரும் படிப்புகளில் மாணவர்கள் சேர்வது தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை, இப்படிப்புகள் பற்றிய விழிப்புணர்வும், இத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளுமேயாகும் என்றார்.

இந்தியாவில் பஞ்சாயத் ராஜ் அருங்காட்சியகம், பொதுமக்கள் அருங்காட்சியகம் என பல்வேறு அருங்காட்சியகங்கள் உருவாகப்போகிறது. இதற்கு ஏராளமான மனித வளம் தேவைப்படுகிறது.

அதேப்போல, கலைக் கூடங்களுக்கும் அருங்காட்சியகங்கள் தேவைப்படுகின்றன. வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படம், ஓவியங்கள், கைவினைப் பொருட்களை சேகரிப்பவர்களுக்கும், ஓவியர்களுக்கும், கலாச்சார படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும் கூட அருங்காட்சியகங்கள் தேவைப்படும்.

தேசிய அருங்காட்சியக கல்வி நிலையம் அருங்காட்சியகத் துறையில் முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை வழங்குகிறது.

4 செமஸ்டர்களாக இப்படிப்பு நடைபெறுகிறது. இதனுடன் 6 மாத உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியும் உள்ளது.

அருங்காட்சியகப் படிப்பை இந்தியாவில் 4 கல்வி நிறுவனங்கள் மட்டுமே நடத்துகின்றன. மகாராஜா சயாஜிராவ் பல்கலை-வதோத்ரா, பாரத் கலா பவன்-வாரணாசி, கொல்கட்டா பல்கலை மற்றும் தேசிய அருங்காட்சியக கல்வி மையம் ஆகியவையாகும்.

இப்படிப்பிற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அருங்காட்சியகப் படிப்புடன் வெளிநாட்டு மொழி ஒன்றையும் படித்துக் கொண்டால் நிச்சயம் மாணவர்கள் இத்துறையில் சாதிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us