தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/குழுவிவாதத்தில் கலந்துரையாடல் என்னும் கலை

குழுவிவாதத்தில் கலந்துரையாடல் என்னும் கலை

குழுவிவாதத்தில் கலந்துரையாடல் என்னும் கலை


நவ 18, 2011 12:00 AM

நவ 18, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 18, 2011 12:00 AM நவ 18, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி ஆண்டு ஏறக்குறைய நிறைவடையப் போகிறது. கல்லூரி இறுதியாண்டு பயில்பவர்கள் வரும் ஜனவரியில் நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள நேரிடும். அதிலும் குழுவிவாதம் முக்கியப் பங்கு வகிக்கும். சிலர் கேட் தேர்வுக்காகவும், இதர எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வுக்காகவும் தயாராகிக் கொண்டிருப்பர். அவர்களுக்கு குழுவிவாதத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

எப்படி நடக்கிறது குழு விவாதம்

பெரும்பான்மை பி-ஸ்கூல்களில் போட்டியாளர்களை ஐந்து முதல் 15  உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்து, விவாதத்தில் ஈடுபடச் செய்வர். சில இடங்களில் பேராசிரியர்களும் குழுவில் பங்கேற்பர். குழு விவாதத்தில் உள்ள சாதகமான அம்சங்களைக் கொண்டே தேர்வு செய்யப்படும் சூழலும் உண்டு. ஏதேனும் ஒரு நிகழ்வு, பிரச்னை விவாதத்திற்கு உள்ளாக்கப்படும். அது பொது விஷயமாகவோ, வணிகம் சார்ந்ததாகவோ இருக்கலாம். அதுபற்றிய சிறு விளக்கம் குழுக்களுக்குத் தரப்பட்டு, பங்கேற்பாளர்கள் அதைப்பற்றிச் சிந்திக்க ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தரப்படும்.

அந்தக்குழுவினர் பதினைந்து அல்லது அரை மணி நேரம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்து, ஒவ்வொருவருக்கும் தலா ஒன்று அல்லது இரண்டு நிமிட அவகாசம் வழங்கப்படும். இறுதியில் ஒரு முடிவு காணப்பட வேண்டும். சில கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவனும் பேச வேண்டும் என்பதை கட்டாயமாக வைத்துள்ளனர்.

மதிப்பிடும் முறை

மாணவன் சுயசிந்தனையுடன் செயல்படுகிறாரா; குறுகிய அவகாசத்தில் ஒன்றைப் பற்றிய அவரது கோணம் என்ன? அந்த எண்ணத்தை எப்படி வெளிப்படுத்துகிறார், தொடர்ச்சியான விவாதத்தில் தன் வாதத்தை எப்படி முன்வைக்கிறார் என்பதை குழு விவாதத்தின் மூலமே தேர்வுக்குழுவினர் மதிப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் குழு நடத்தை எப்படி, மற்றவர்களின் கருத்துகளை கேட்கவும், அதற்கு மதிப்பளிக்கவும் தயாராக இருக்கிறாரா? சகிப்புத்தன்மை போன்றவற்றையும் கவனிக்கின்றனர்.

ஆகவே, குழுவிவாதத்தில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் உச்சரிப்பு மற்றும் ஒலிப்புத்தன்மை, தெளிவாகக்கூறும் பாங்கு போன்றவற்றை பயிற்சிகளின் மூலம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தயாராகும் முறை

புற்றீசல்கள் போல் முளைத்திருக்கின்றன பயிற்சி நிலையங்கள். மாணவர்களை ஈர்ப்பதற்காக கூறு போட்டு விற்பனை செய்யும் மீன் சந்தை போல மாறியிருக்கிறது, குழு விவாதப் பயிற்சி. சமகாலப் பிரச்னைகள், நிகழ்வுகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் எண்ணங்களை விவாதத்தின்போது மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் எடுத்துரைக்கும் வகையில், தொகுத்துக் கொள்ளுங்கள்.

செய்தித்தாள்களைப் படிப்பதிலும், உங்களைச் சுற்றி நடப்பனவற்றைத் தெரிந்து கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள். விவாதங்களில் பங்கேற்று பயிற்சி எடுப்பதில் பரிகாசம் வேண்டாம். உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதே குழு விவாதத்தில் ஜொலிப்பதற்கான வழி.

ஐதராபாத் பேராசிரியர் ரவிந்திர சித்தூரின் கூற்றுப்படி, "நீங்கள் நீண்ட காலமாக தயார் செய்து வைத்திருந்த கேள்வி, பதிலை மறந்திருக்கலாம். அது ஒரு விஷயமே அல்ல. குழு விவாதத்துக்கு பேனா, பென்சில், ரப்பர் கொண்டு செல்ல மறந்திருக்கலாம். ஆனால், சுய அறிவையும் சமயோசிதத்தையும் உடன் கொண்டு செல்ல மறந்து விடாதீர்கள்".

உங்களின் கவுரமும், தரமும் உங்களின் நுனி நாக்கில் இருக்கிறது என்றொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. அது குழுவிவாதத்தில் 100 சதவீதம் பிரதிபலிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us