ஜன 25, 2012 12:00 AM
ஜன 25, 2012 12:00 AM
அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த வனத்துறை பணியின் மீது பலருக்கும் ஆர்வமிருப்பதில் வியப்பில்லை. இந்தியளவில், வனத்துறைப் பணிக்கென நடத்தும் தேர்வை எழுதி வெற்றிபெறுவதில், ஏராளமான பேர் முனைப்புக் காட்டுகின்றனர்.
இந்த தேர்வானது, 10 நாட்கள் வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, UPSC நடத்தும் ஆளுமைத் தேர்வு(personality test) நடைபெறுகிறது. இத்தேர்வில் வெற்றிபெறுவதற்கான அதிகபட்ச முயற்சி வரம்பு 4 முறை மட்டுமே என்ற அளவில் சுருக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம்
Single central recruitment fee stamp என்பதன் மூலமாக, ரூ.100 செலுத்த வேண்டும். அதேசமயம், SC/ST மற்றும் பெண் தேர்வர்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விதிவிலக்கு உண்டு. தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டண விலக்கு சலுகை உண்டு.
தகுதி
விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல், வேளாண்மை, வனவியல் ஆகியவற்றில் இளநிலைப் பட்டம் அல்லது பொறியியல் பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை
எழுத்துத் தேர்வு - எழுத்துத் தேர்வில் மொத்தம் 6 தாள்கள் உள்ளன.
தாள் 1 - General English(300 marks), தாள் 2 - General knowledge(300marks), தாள் 3,4,5,6 - பட்டியலிலுள்ள விருப்பப் பாடங்களில் ஏதேனும் இரண்டைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். ஒவ்வொரு பாடமும் தலா 200 மதிப்பெண்களுடன் 2 தாள்களைக் கொண்டிருக்கும். General English மற்றும் General knowledge ஆகிய தாள்களின் தரமானது, ஒரு அறிவியல் அல்லது பொறியியல் பட்டதாரி எழுதும் நிலையில் இருக்கும். அதேசமயம், விருப்பப் பாட தாள்களின் தரம் ஹானர்ஸ் டிகிரி நிலையில் இருக்கும்.
தாள் 1-ல், ஆங்கில கட்டுரைகள் மற்றும் ஆங்கில கேள்விகள் ஆகியவை இருக்கும். தேர்வெழுதுபவரின் ஆங்கிலப் புரிந்துணர்வு, ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பது இதன் நோக்கம்.
தாள் 2-ல், நடப்பு சம்பவங்கள், இந்திய அரசியல் அமைப்பு, இந்திய அரசியல் சாசனம், இந்திய வரலாறு மற்றும் புவியியல் ஆகியவைப் பற்றி கேட்கப்பட்டிருக்கும்.
விருப்பப் பாடங்களின் பட்டியல்
வேளாண்மை, வேளாண் பொறியியல், விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், ரசாயனப் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், வனவியல்(Forestry), மண்ணியல், கணிதம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இயற்பியில், புள்ளியியல் மற்றும் விலங்கியல்.
அதேசமயம், கீழ்கண்ட பொருத்தங்களில் வரும் பாடங்களை தேர்ந்தெடுக்க முடியாது. அவை,
1.வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல், 2.வேளாண்மை, விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், 3.வேதியியல் மற்றும் ரசாயனப் பொறியியல், 4.கணிதம் மற்றும் புள்ளியியல், 5.வேளாண்மை, ரசாயனம், சிவில், மெக்கானிக்கல் போன்ற பொறியியல் பாடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்கள்.
விருப்பப் பாடங்கள் சம மதிப்பெண்கள் கொண்ட 8 கேள்விகளைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு தாளும், பகுதி A மற்றும் பகுதி B என்று பிரிக்கப்பட்டு, தலா 4 கேள்விகளைக் கொண்டிருக்கும். மொத்தம் 8 கேள்விகளில் 5 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கட்டாயம் 1 கேள்வியாவது எழுத வேண்டும்.
நேர்முகத் தேர்வு அல்லது ஆளுமைத் தேர்வு என்பது 300 மதிப்பெண்களைக் கொண்டது. ஒருவரின் மனத்திறன் மற்றும் ஆளுமைகளை சோதித்தறிய இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வின் மூலம் கிடைக்கும் பணித் துறைகள் மற்றும் பதவிகள்
* Research Establishments such as Indian Council of Forestry Research and Education ,Indian Agricultural Research Institute, Indian Veterinary Research Institute, Agriculture Universities, Forest Research Institutes - Research Fellows/Associates
* Research Organisations such as Indian Agricultural Research Institute (regional centre), Central Institute of Post Harvest Engineering & Technology, Indian Council of Forestry Research and Education, ICAR Research Complex For NEH Region - Scientists
* Krishi Vigyan Kendra - Subject Matter Specialists
* State Public Service Commissions, for instance, Maharashtra Public Service Commission - Assistant Commissioner Animal Husbandry (over 150 vacancies)
* Cantonment Boards, for instance, Chakrata - Foresters
* Central Fertilizer Quality Control & Training Institute - Inspectors (Fertilisers)
