த்ரில்லிங் விரும்பும் மாணவர்களுக்கான பி.ஏ.,கிரிமினாலஜி படிப்பு!....
த்ரில்லிங் விரும்பும் மாணவர்களுக்கான பி.ஏ.,கிரிமினாலஜி படிப்பு!....
மார் 14, 2012 12:00 AM
மார் 14, 2012 12:00 AM
கிரிமினாலஜி மற்றும் காவல் நிர்வாகம் ஆகியவற்றில், இளநிலைப் படிப்பை மேற்கொள்வதானது, துப்பறிதல், புலனாய்வு மற்றும் குற்றத்தை விசாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் சட்ட அமலாக்க ஏஜென்சிகளுடன் உங்களை இணைக்கிறது.
நாட்டில் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், கிரிமினாலஜி மற்றும் காவல் நிர்வாகம் ஆகியவை தொடர்பான பணிகளின் கிராக்கி கூடி வருகிறது. கிரிமினாலஜி பட்டதாரிகள், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள், சிபிஐ மற்றும் சிஐடி போன்ற மத்திய, மாநில காவல் அமைப்புகள், ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணிபுரியலாம்.
ஒரு கிரிமினாலஜிஸ்ட் என்பவர், ஒரு குற்றத்தின் பின்னணி காரணங்களை ஆராய்வதோடு, புலனாய்வு, தண்டனை, மறுவாழ்வு மற்றும் திருத்தம் போன்ற பலவிதமான நிலைகளிலும் பணியாற்றுகிறார். இப்படிப்பின் மூன்றாம் ஆண்டில், காவல் நிலையம், நடுவர் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், மாவட்ட குற்ற ஆவண பிரிவு, தடயவியல் அறிவியல் ஆய்வகம், தடயவியல் மருத்துவத் துறை மற்றும் மத்திய சிறை போன்றவைகள் பற்றிய கள அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்படுகிறது.
மேலும் இந்தப் படிப்பில், உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, குதிரையேற்றம், நீச்சல், யோகா மற்றும் கராத்தே போன்ற பயிற்சிகளும் உண்டு. இவை கட்டாயப் பயிற்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிமினாலஜி பாடங்கள்
Principles of Criminology, Vigilance & Security Management, Prison Administration, Cyber Crimes, Crowd Control and Riot Management, Private Detective and Investigation, among others.
