தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஹிந்தி, சமஸ்கிருத படிப்புகளில் ஆர்வமா?

ஹிந்தி, சமஸ்கிருத படிப்புகளில் ஆர்வமா?

ஹிந்தி, சமஸ்கிருத படிப்புகளில் ஆர்வமா?


ஆக 26, 2012 12:00 AM

ஆக 26, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 26, 2012 12:00 AM ஆக 26, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹிந்தி மற்றும் சமஸ்கிருத படிப்புகளுக்கு தற்போது வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அவை தொடர்பான பட்டப் படிப்புகளை மேற்கொண்டால், வேலைவாய்ப்புகளை பெறுவது கடினம் என்ற நிலை மாறியுள்ளது. ஆசிரியப் பணி, மொழிபெயர்ப்பு பணி உள்ளிட்ட பல பணி வாய்ப்புகளை இந்த படிப்புகள் வழங்குகின்றன. மேலும், வெளிநாட்டில், கல்லூரி அளவில் மொழி ஆசிரியர் பணியும் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

மொழி படிப்புகளுக்கான தேவைகள்

டெல்லி பல்கலைக்கழகம், டெல்லியிலுள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரி, தெளலத்ராம் கல்லூரி, மிரான்டா ஹவுஸ், கமலா நேரு போன்ற கல்லூரிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத படிப்புகளுக்கு இடம் பிடிப்பதில் பெரிய போட்டியே நிலவுகிறது. ஏனெனில், இந்த இரு மொழிகள் தொடர்பான ஆசிரியப் பணிகளுக்கு அதிகமான ஆட்கள் தேவையிருப்பதால், ஒருவர் வேலைவாய்ப்பை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இப்படிப்புகளில் ஒருவர் முதுநிலை பட்டம் அல்லது பி.எட் போன்ற தகுதிகளை எட்டிவிட்டால், அவருக்கான வேலைவாய்ப்புகள் ஏராளம்.

பாடத்திட்ட மேம்பாடு

வடஇந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தில் அதிக ஆர்வமுள்ளவர்கள் இந்த படிப்புகளை விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள். தற்போது, இந்தப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம், இப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், பி.ஏ/எம்.ஏ முடித்துவிட்டு, ஆசிரியப் பணிக்கு செல்வார்கள்.

ஆனால் புதிய பாடத்திட்டம், அதிக தொழில்முறையிலான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை பட்டப்படிப்பில், அடிஷனல் பேப்பர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் போன்றவை, ஒரு மாணவருக்கு கூடுதல் திறன்களை அளிப்பதாக உள்ளன.

வேலை வாய்ப்புகள்

ஆசிரியப் பணி

இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், தொடக்கக் கல்வி நிலையில், ஹிந்தியானது ஒரு கட்டாயப் பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஹிந்தி பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் கடல் கடந்து பரந்துள்ளன.

வங்கிப் பணிகள் - வங்கிப் பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனம் மற்றும் பிற வங்கிகள், ஹிந்தி மொழி அதிகாரிகளை பணியமர்த்துகின்றன.

மொழிப்பெயர்ப்பு பணி - மொழி பெயர்ப்பு மற்றும் பிழை சரிபார்த்தல் போன்ற பணிகளுக்கு ஹிந்தி பட்டதாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர்.

நாடாளுமன்ற பணிகள் - நாடாளுமன்ற நிருபர் மற்றும் ஹிந்தி உதவியாளர்கள் போன்ற பணி நிலைகளுக்கு ஹிந்தி பட்டதாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர்.

மீடியா மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்

எடிட்டிங், நிருபர் மற்றும் எழுதுதல் போன்ற பல்வேறான பணி வாய்ப்புகள், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் நிறைந்துள்ளன. மேலும், விளம்பரத் துறைகளிலும் சிறந்த பணிவாய்ப்புகள் உள்ளன. மேலும், இன்றைய நிலையில் பெருகிவரும் எப்எம் ரேடியோக்கள் வழங்கும் பணிவாய்ப்புகள் அபரிமிதமானவை.

சம்பளம் எப்படி?

ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சம்பளக் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் விளக்கவுரையாளர்கள் போன்றோர், தங்களின் பணிக்கேற்ப பல நிலைகளில் ஊதியம் பெறுகின்றனர். அரசு மொழி அதிகாரிகள் அல்லது நாடாளுமன்ற பணிகளில் இருப்பவர்கள் ரூ.15000 முதல் ரூ.39000 வரை பெறுகிறார்கள்.

ஹிந்தி மொழியில் மீடியா தொழில் வளர்ச்சியடைந்து திகழ்வதால், ஹிந்தி மொழியை விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us