அக் 16, 2012 12:00 AM
அக் 16, 2012 12:00 AM
கலை என்பது மனிதனின் நாகரீகத்தை சொல்வதாக இருக்கின்றன. அந்த வகையில் அவை ஒரு வரலாற்றுப் பதிவுகள்! குகைகள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறான இடங்களில் காணப்படும் பழைய ஓவியங்கள், மனித வரலாற்றை நமக்கு கற்றுத் தருகின்றன. மனிதன் தன் வாழ்க்கையுடனான அனுபவத்தை, கலையாக பதிவு செய்கிறான். ஆனால், அதில், படைப்பாக்கத் திறனுடன், எந்த வகையில் நிஜத்தை மறுஉருவாக்கம் செய்கிறீர்கள் என்பதுதான் கலையின் சவாலே.
ஓவியப் பயிற்சி
பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த ஒருவர், BFA(Bachelor of fine arts) and BVA(Bachelor of visual arts) போன்ற இளநிலைப் படிப்புகளில் சேர்ந்து, தனது கலைத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். பொதுவாக, இந்த 2 படிப்புகளுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லையென்றாலும், கல்லூரிக்கு கல்லூரி, term வேறுபடுகிறது. பரந்து விரிந்திருக்கும் இந்த துறையில், ஒருவர் தனது விருப்பத்திற்கேற்ப, சிறப்பு பிரிவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். Painting, Sculpture, Applied art or Art history போன்றவை, அவற்றுள் முக்கியமானவை.
இளநிலைப் படிப்பை முடித்தப் பின்னர், 2 வருட முதுநிலை நுண்கலைப் படிப்பை மேற்கொண்டு, தனது திறனை இன்னும் மெருகேற்றலாம்.
மாணவர் சேர்க்கை முறை
திறனறி மற்றும் கலைத் தேர்வுகளின் மூலமாக, மாணவர் தேர்வு நடைபெறும். உதாரணமாக, இத்தேர்வுகளின் பொதுஅறிவுப் பிரிவில், எம்.எப்.ஹ¤சேன் ஒரு ஓவியரா அல்லது சிற்பியா? மற்றும் அம்ஜத் அலி கான் ஒரு சரோட் கலைஞரா அல்லது கிடார் கலைஞரா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
அதேசமயம், Life drawing பிரிவில், வரைவதற்கு ஒரு still model கொடுக்கப்படும். பெயின்டிங் பேப்பரானது, ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையம் போன்ற ஒரு குறிப்பிட்ட கருத்து அடிப்படையில் இருக்கும்.
நான்கு சிறப்புத் துறைகள்
பெயின்டிங்
இந்த பெயின்டிங் வகுப்பானது, கலர் தியரிகளையும், வெவ்வேறு விதமான பெயின்டிங் நுட்பங்களையும் கற்பிக்கிறது. Life study, drawing, sketching and composition போன்றவை அவற்றுள் முக்கியமானவை. ஒரு தனி ஓவியர், தனது ஓவியங்களை நேரடியாக விற்பனை செய்ய வேண்டியதில்லை. அவர்களை, கேலரிகள் அனுகுகின்றன. இன்றைய சமூக போக்கின் ஒரு சின்னமாக, கலை மாறியுள்ளது.
வேலை வாய்ப்புகள்
கேலரிகளில், நீங்கள் வரைந்த ஓவியத்தை காட்சிக்கு வைக்கலாம் அல்லது தனியார்களிடம் உங்களின் ஓவியங்களை நீங்கள் மார்க்கெட் செய்யலாம். Mural பெயின்டிங் வகைகள், தற்போது கவனத்தை கவருவதாக உள்ளன. மேலும், ஒருவர், காலத்திற்கேற்ற கலை மையங்களில் சேரலாம். இந்த மையங்கள், ஓவியங்கள் வரைவதற்கான நிதி மற்றும் இடத்தை தருகின்றன. "ஆர்ட் கேம்ப்" உள்ளிட்ட நிகழ்வுகளில், பயோடேட்டா மற்றும் பணி அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், பல ஓவியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜுனியர்கள் ரூ.10,000ம், சீனியர்கள் ரூ.15,000ம் பெறுகிறார்கள்.
சிற்பம்
கல், களிமண் மற்றும் உலோகத்திலிருந்து, தேவையான ஒரு உருவத்தை செதுக்கும் கலையானது, சிற்பக்கலை படிப்பில் கற்பிக்கப்படுகிறது. சிற்பக்கலையில் ஒருவர் சிறந்து விளங்க, அவர், மனித உடலமைப்பைப் பற்றி நல்ல தெளிவும், அறிவும் உடையவராக இருத்தல் வேண்டும். சில சிற்பிகள், கல் சிற்பங்களைவிட, உலோக சிற்பங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஏனென்றால், கல் சிற்பங்கள் உடைந்தால், அதை மீட்டுருவாக்கம் செய்தல் இயலாது. ஆனால், உலோகங்களைப் பொறுத்தளவில், கவலையில்லை.
பணி வாய்ப்புகள்
பல பெரிய நிறுவனங்கள், தங்களின் வளாகம் மற்றும் அலுவலகங்களை அழகுபடுத்த, சிற்பிகளை நாடுகின்றன. வரலாறு மற்றும் அறிவியல் அருங்காட்சியகங்கள், மனித மற்றும் மிருக மாதிரிகளை உருவாக்க, சிற்பிகளை நாடுகின்றன. மேலும், சினிமா, அனிமேஷன் மற்றும் பொம்பை தொழில் துறைகளிலும் சிற்பிகளுக்கு பரவலான பணி வாய்ப்புகள் உள்ளன. இவைத்தவிர, கணினி 3டி மாடலிங் படிப்பை முடித்தால், தொழில்நுட்ப துறைகளில், அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அப்ளைடு ஆர்ட்
BFA படிப்பில், இந்த அப்ளைடு ஆர்ட் படிப்பானது, ஒரு பிரபலம் வாய்ந்த specialization படிப்பாக உள்ளது. இப்படிப்பில், கலையை, எவ்வாறு வணிக நோக்கில் பயன்படுத்தலாம் என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது. விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, விளம்பரங்கள், புத்தகங்கள், போஸ்டர்கள் மற்றும் இதர காட்சியமைப்புகள் ஆகியவற்றை வடிவமைப்பது குறித்து கற்றுத்தரப்படுகிறது.
பணிவாய்ப்பு - பத்திரிகைகள் மற்றும் புத்தக துறைகளில் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. இத்துறைகளில் சிறப்புற, Photoshop, design, quark xpress, corel draw போனறவற்றில், தெளிவான அறிவும் இருக்க வேண்டும். Illustrator என்ற பணியானது, முக்கியமான ஒன்றாகும். இந்த Illustrators, புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு, படங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள், கிராபிக், டிஜிட்டல் அல்லது நிஜத்துவ விளக்கப்படங்கள் என பல நிலைகளில் பணியாற்றுகிறார்கள்.
கார்டூனிஸ்ட் என்பவர், ஒரு கேலி சித்திரத்திற்கு, நகைச்சுவை மற்றும் விமர்சனத் தன்மையைக் கொண்டு வருகிறார். செய்தித்தாளைப் பொறுத்தவரை, விரைவாக சிந்திக்க வேண்டும் மற்றும் தலைப்பு விஷயங்களை தெளிவாகப் படிக்க வேண்டும்.
விளம்பரம்
வாடிக்கையாளரின்(clients) கருத்தைப் புரிந்துகொண்டு, மக்களை மனதில் நிறுத்தி, மிக சரியான விதத்தில் செயல்பட வேண்டும். ப்ரெளச்சர்கள், துண்டு பிரசுரங்கள் உட்பட, பில் போர்டுகள் வரை, கவனமாக செயல்பட வேண்டும். மால்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, சரியாக செயல்பட வேண்டும்.
தொலைக்காட்சி/திரைப்படங்கள்
வெவ்வேறான வாசக வடிவம் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி, பலவிதமான தலைப்புகளைக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் சினிமாவில் உண்டு. ஆனால், சினிமாவைப் போலன்றி, கிராபிக் டிசைனர்கள், செய்தி சேனல்களில் விரைவாக செயல்பட வேண்டும். அதுவும் லைவ் நிகழ்ச்சிகளின்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாசகங்களில் தவறு செய்தால், பிறகு ஒட்டுமொத்தமாக பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
போட்டோகிராபி
பிற கலை வடிவங்களைப் போலன்றி, போட்டோகிராபி துறை என்பது, வித்தியாசமான ஒன்று. போட்டோகிராபர்கள், வணிகம், உற்பத்தி, பத்திரிகை, செய்தித்தாள்கள், திரைப்படங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், விளம்பரம், வலைத்தளம் மற்றும் திருமணம் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிகிறார்கள். எடிட்டோரியல் போட்டோகிராபி என்பது கதையை சொல்வதாகும், ப்ராடக்ட் போட்டோகிராபி என்பது, வணிகரீதியான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை படம் பிடிப்பதாகும். போட்டோகிராபி தொழிலில், மிகச் சரியான நேரத்தில், துல்லியமாக படம் பிடிப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.
ஆர்ட் வரலாறு(Art History)
ஆதி வரலாறு காலம் முதல் இன்றைய நிலை வரையிலான விசுவல் ஆர்ட்டின் அனைத்து அம்சங்கள் அடிப்படையிலான தியரிகளை, ஆர்ட் வரலாற்று மாணவர் படிக்கிறார். மேலும், விசுவல் அமைப்புகள் பற்றி நுட்பமாக சிந்திக்கவும் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். கியூரேட்டர்கள்(Curators), கேலரிகள், ஏல மையங்கள், செய்தித்தாள்கள், குறுஞ்செய்தி இதழ் மற்றும் வாரப் பத்திரிகைகள் ஆகியவற்றால் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
படைப்புத்திறனும் சந்தைப்படுத்தலும்
பிறரைக் கவரக்கூடிய வகையில் உங்களால் ஒரு படைப்பை மேற்கொள்ள முடியுமென்றால், படைப்பாக்க சந்தையில் உங்களால் நீடித்து நிற்க முடியும். மேலும், வரைதல் திறனுடன், நல்ல விசுவல் கம்யூனிகேஷன் திறமையும் இருக்க வேண்டும். கிடைக்கும் கால அவகாசத்திற்குள் நாம் எந்தளவிற்கு விரைவாக படைப்புத்திறனை வெளிப்படுத்தி சிந்திக்கிறோம் என்பதே முக்கியம்.
படைப்புத்திறன் என்பது வற்றி விடுவதோ அல்லது அடைந்துகொள்வதோ அல்ல. அம்சங்களை வெளிப்படுத்துவதில் நீங்கள், புதிய புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும். சுய முனைப்பு என்பது முக்கியம். உங்களுக்கு வேலை தருபவர்கள் மற்றும் உங்களது திறமை சந்திக்கவிருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
நீங்கள், உங்களின் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, வீட்டில் இருந்துகொண்டே சம்பாதிக்கலாம். உங்களுக்கென்று ஒரு தனியான ஆன்லைன் வலைதளத்தை உருவாக்கிக் கொண்டு, உங்களின் பணிகளை விளம்பரப்படுத்தி, உங்களின் விபரங்களையும்(பயோடேட்டா) வெளியிடலாம்.
வருமானம்
உங்களின் படைப்பாக்கத் திறன் மற்றும் சாமர்த்தியம் ஆகியவற்றைப் பொறுத்தே, ஊதியம் அமைகிறது. துறைக்கு துறை இது வேறுபடும். ஆரம்ப நிலை சம்பளமானது, ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்கும். அதேசமயம், ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, ப்ரீலேன்ஸ் பணிகளிலும் ஈடுபடலாம். இத்துறைகளில், அனுபவம் மற்றும் திறன் கூடகூட, வருமானமும் கூடுகிறது.
கலைதான் உலகம்
கலைகள்தான் உலகை ஆள்கின்றன. கலைகளற்ற மனித வாழ்வை யாரேனும் கற்பனை செய்ய முடியுமா? அது நிச்சயம் ஒரு மிருக வாழ்க்கையே! படைப்பாக்கத் திறன்தான் மனிதனை மனிதனாக ஆக்கி, அவனுள் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.
