தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்கு தயாராதல் எவ்வாறு?

ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்கு தயாராதல் எவ்வாறு?

ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்கு தயாராதல் எவ்வாறு?


நவ 01, 2012 12:00 AM

நவ 01, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 01, 2012 12:00 AM நவ 01, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய ஐஐடி -களில் இடம்பெற துடிக்கும் மாணவர்கள், அதற்கான நுழைவுத்தேர்வுக்கு தயாராவதில் ஆதித ஆர்வம் காட்டுவார்கள். அந்த ஐஐடி -களுக்கான நுழைவுத்தேர்வு முறையானது, மாற்றம் பெற்றுள்ளதையடுத்து, அந்த மாற்றங்கள் குறித்தும், அத்தேர்வுகளுக்கு தயாராகும் உத்திகள் குறித்தும் தெளிவாக அறிதல் அவசியம்.

அத்தேர்வானது 2 கட்டங்களாக நடக்கிறது. ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ்டு என்பவைதான் அவை. இந்த 2 தேர்வுகளுக்கும் இடைபட்ட கால அவகாசம் 3 முதல் 4 வாரங்கள். ஜேஇஇ மெயின் தேர்வானது, ஏஐஇஇஇ தேர்வுக்கு நிகரானது மற்றும் இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வானது, ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்கு நிகரானது மற்றும் இதை ஐஐடி -கள் நடத்துகின்றன. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின் கேள்வித்தாள், ஐஐடி-ஜேஇஇ தேர்வின் கேள்வித்தாளைப் போன்றே இருக்கும் என்று ஐஐடி -களும், கூட்டு சேர்க்கை வாரியமும் அறிவித்துள்ளன.

தேர்வுக்கு தயாராதல்

ஐஐடி நுழைவுத் தேர்வுகளுக்கு, முன்கூட்டியே தயாராவதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் அறிந்துள்ளார்கள். நுழைவுத்தேர்வில் தற்போது போட்டி மிகவும் அதிகரித்துள்ளதால், கூடிய விரைவில், அடிப்படை விஷயங்களில் தெளிவு பெறல் வேண்டும். மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சியளிக்கும் விதமாக, பயிற்சி மையங்கள் Early edge programmes மூலம் கூடுதல் திறன்களை அளிக்கின்றன.

ஏன் முன்னதாகவே தயாராக வேண்டும்?

குறைந்தது 2 முதல் 4 வருடங்கள் முன்பாகவே, உங்களின் தயாராதல் பணியை தொடங்கிவிட வேண்டும்.

ஐஐடி போட்டித் தேர்வு என்ற கடினமான நிலைக்கு நீங்கள் படிப்படியாக, தெளிவான புரிதலுடன் உயர, இந்த காலஅளவானது உங்களுக்கு துணைபுரிகிறது. இந்த போதுமான அவகாசத்தில் தேர்வைப் பற்றிய ஒருவரின் புரிந்துணர்வு வளர்ச்சியடைகிறது.

தேர்வு குறித்தான டென்ஷனைக் குறைத்து, பலமுறைகள் ரிவிசன் மேற்கொண்டு, கடைசிநேர சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள உதவுகிறது.

முன் தேர்வுகள் மற்றும் ஏதாவது படிப்பில் சேருதல் போன்றவை, படிப்புக்காக உங்களுக்கு அதிக நேரத்தை தருவதோடு, பள்ளி மற்றும் வாரிய படிப்புகளுக்கு அதிக அறிவையும் தருகிறது.

அதிக வருடங்கள் பயிற்சி தேவையா?

குறைந்தது 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 4 வருடங்கள் வரை, ஐஐடி போட்டித் தேர்வுக்கு பயிற்சி தேவையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை தேடுவது அவசியம். தங்களின் படிப்பில் மிகவும் சிறப்பாக செயல்படாத மாணவர்கள், தங்ளால் ஐஐடி போட்டித் தேர்வில் வெற்றிபெற முடியாது என்று நினைக்கின்றனர். ஆனால், ஐஐடி போட்டித்தேர்வு என்பது அதிகம் பகுப்பாய்வுத் திறன் தொடர்பானது. சாதாரண படிப்புகளிலிருந்து இது மாறுபட்டது.

பொதுவாக, கோச்சிங் மையங்களுக்கான நுழைவுத் தேர்வை பிரமாதமாக எழுதி, அதன்மூலம் வாய்ப்பு பெற்று, சிறந்த பயிற்சி பெற்று, நுழைவுத்தேர்வுகளில் முன்னணி இடங்களை பிடிக்கும் மாணவர்களை நாம் காண்கிறோம். வருடாவருடம் இந்த நிகழ்வை நாம் காணலாம். ஆனால், வேறுசில முரண்பாடுகளும் உண்டு. கோச்சிங் மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை, கடினப்பட்டுத் தேறி, பயிற்சியில் இடம்பெறும் மாணவர்கள், பின்னர் சிறப்பாக செயல்பட்டு நுழைவுத்தேர்வில் கலக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

10ம் வகுப்பிற்கு பிறகான அனுபவம்

11ம் வகுப்பில் நுழையும் மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில், 10ம் வகுப்பைவிட, மிக அதிக வித்தியாசத்தை உணர்கிறார்கள். 11ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு எடுக்கும் முயற்சியானது, அதேயளவு மதிப்பெண்களை 10ம் வகுப்பில் எடுப்பதற்கு மேற்கொண்டு முயற்சியைவிட பெரியது. ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்கான முன்முயற்சியானது, உயர்நிலை பகுப்பாய்வு திறனோடு, அதிகளவு முயற்சியையும் கொண்டது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு முதல் தேவை, மனதளவில் தயாராவது. மனதளவில் தயாராகாமல், பெற்றோர் சொல்கிறார்கள் என்பதற்காக, ஏதோ ஒரு கோச்சிங் மையத்தில் யாரும் பெயருக்காக சேர வேண்டாம்.

ஐஐடி-ஜேஇஇ தேர்வின் பாடத்திட்டத்தோடு, 11 மற்றும் 12ம் வகுப்புகளின் வாரியத்தேர்வு பாடத்திட்டம், குறைந்தளவோ அல்லது அதிகளவோ ஒத்திருக்கும். அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு தென்படும். நீங்கள் சிறிதளவு முயற்சியிலேயே, ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்கு சிறப்பாக தயாராகி விட்டீர்கள் என்றால், நீங்கள் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் சிறப்பாக படித்திருக்கிறார்கள் என்ற அர்த்தம். ஆனால், இந்தக் கருத்து மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. விதிவிலக்குகளும் உண்டு.

பொதுவான ஆலோசனைகள்

பள்ளித் தேர்வுகளைப் போலன்றி, ஒரு குறிப்பிட்டளவு முயற்சி இருந்தால்தான், ஐஐடி போட்டித் தேர்வில் தேற முடியும். வெறுமனே கருத்துக்களைப் படிப்பதால், வெற்றியடைய முடியாது. இந்தக் கருத்தாக்கங்களை, சிக்கல்களை தீர்க்கும் பொருட்டு நீங்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். ஐஐடி-ஜேஇஇ தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களை, கருத்தாக்கத்தை நேரடியாக பயன்படுத்துவதன் மூலமாக தீர்த்துவிட முடியாது. பல சிக்கல்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்படை கருத்தாக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். எனவே, உங்களின் பகுப்பாய்வுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சில முயற்சிகள் மட்டும் செய்துவிட்டு, தோல்வியடைந்தால், அதற்காக அந்த குறிப்பிட்ட சிக்கல் தீர்த்தலை விட்டுவிடாதீர்கள். பலதடவைகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நேரத்தை சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதுதொடர்பான புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. சிக்கல் தீர்த்தல் செயல்பாடு என்பது, எண்ணிக்கை சார்ந்ததல்ல, தரம் சார்ந்தது. நீங்களே, 30 முதல் 40 சிக்கல்கள் வரை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு முழுமையாக சிக்கல் தீர்க்கும் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

அதேநேரத்தில், ஒரே தலைப்பில், ஒரே நேரத்தில், 200 சிக்கல்களுக்கு மேல் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது சரியாக இருக்காது. ஒரு தீவிரமான ஐஐடி-ஜேஇஇ அபிமானி, 11, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மற்றும் ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளுக்கு, தனித்தனி வியூகங்களை வைத்திருப்பார். ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான தயாராதலின்போது, மேல்நிலைப் பள்ளி பாடங்கள் தொடர்பாக வரும் பகுதிகளை முதலில் படிப்பது நல்லது.

உங்கள் திறனை அறியுங்கள்

மாணவர்கள், சில வருடங்கள் முன்பாகவே, ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் செயல்முறையில், நல்ல திட்டமிடல் தேவை. உங்களின் பள்ளிப் படிப்பு பாதிப்படையா வண்ணம் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். அதற்கேற்ப உங்களின் நேரம் மற்றும் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ளுங்கள். உங்களின் திறன் எவ்வளவு என்பதை அறிந்து, உங்களால் எந்தளவுக்கு சமாளிக்க முடியும் என்பதை கணித்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us