தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கடலியல் துறையில் பிரமாண்ட சம்பளம்!

கடலியல் துறையில் பிரமாண்ட சம்பளம்!

கடலியல் துறையில் பிரமாண்ட சம்பளம்!


ஜூன் 12, 2013 12:00 AM

ஜூன் 12, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 12, 2013 12:00 AM ஜூன் 12, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசியனோகிராபி எனப்படும் கடலியல் என்பது கடல் பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பற்றி படிப்பதாகும். இந்தத் துறையில் உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் போன்ற பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

வாய்ப்புகள் மற்றும் வேலைச் சூழல்

கடல் நீர் உப்பு, ப்ரோமைன், மெக்னீசியம் போன்ற எண்ணிலடங்காத பொருட்களை உள்ளடக்கி உள்ளது. கடலுக்கடியில் இருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது. எனவே இவை சம்பந்தப்பட்ட துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

ஓசியனோகிராபி படித்தவர்கள் கடல் அமைப்புகள், கடல் திட்டுகள், நீரோட்டங்கள், கடலில் உள்ள எரிமலைகள், கடல் மலைகள், பவளப்பாறைகள் போன்றவற்றைப் பற்றிய கடல்சார் அறிவை கொண்டவர்களாக இருப்பர்.

வழங்கப்படும் பட்டம்

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல கல்லூரிகள் இந்த படிப்பை வழங்குகின்றன. பி.எஸ்சி., எம்.எஸ்சி. படிப்பாக இது வழங்கப்படுகின்றது. ஒரு சில கல்லூரிகள் எம்.டெக்., இல் ஓசியனோகிராபி படிப்பை வழங்குகின்றன.

கல்வித்தகுதி

பி.எஸ்சி. படிப்பதற்கு பிளஸ் 2 இல் அறிவியல் அல்லது புவியியல் பாடத்தை படித்திருக்க வேண்டும்.
எம்.எஸ்சி. படிப்பதற்கு பி.எஸ்சி., இல் புவியியல் அல்லது ஓசியனோகிராபி படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

குறைந்தது 5 வருட பணி அனுபவம் உள்ள திறன் வாய்ந்த ஒருவர் வருடத்திற்கு சராசரியாக ரூ.30 லட்சமும், 10 வருட பணி அனுபவம் உள்ள திறன் வாய்ந்த ஒருவர் ரூ.50 லட்சமும் சம்பளமாக பெற வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகள்

நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆஃப் ஓசியனோகிராபி, ஆந்திரா
பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
கல்கத்தா பல்கலைக்கழகம், மேற்கு வங்கம்
சென்ட்ரல் யூனிவர்சிட்டி ஹைதராபாத், ஆந்திரா

வெளிநாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகள்

பேங்கார் யூனிவர்சிட்டி, இங்கிலாந்து
யூனிவர்சிட்டி ஆஃப் சவுதாம்ப்டன், இங்கிலாந்து
சன்வே யூனிவர்சிட்டி, மலேசியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us