/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பல்கலைக்கழகங்களுக்கு அதிக இட வசதி தேவையா?
/
பல்கலைக்கழகங்களுக்கு அதிக இட வசதி தேவையா?
பிப் 23, 2014 12:00 AM
பிப் 23, 2014 12:00 AM
ஒரு தனி மனிதனின் வாழ்விடத்திற்கும், அவன் விளையாடும் விளையாட்டு திடலுக்கும், படிக்கும் பள்ளிக்கூடங்களுக்குமான இட அளவு என்பது, ஒன்றை விட ஒன்று அதிக அளவினை உடையதாக இருக்கிறது. ஒரு மனிதன் உண்பதற்கும், உறங்குவதற்கும், மனதினை நெறிப்படுத்துவதற்கும் சிறு தோட்டமுடைய வீடு போதுமானதாக இருக்கிறது.
ஆனால் அவன் ஒடியாடி உடலை வலுப்படுத்துவதற்கு வீட்டில் உள்ள இடம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே ஒரு பெரிய திடல் தேவைப்படுகிறது. பெரும் நீளமும், அகலமும் உடைய திறந்தவெளி திடல் தனி மனிதனுக்கு மட்டுமாக இருப்பதில்லை. அது பலரும் பயன்படுத்தும் பொது இடமாகவே இருக்கிறது. அதே போன்று, படிக்கும் பள்ளிக்கூடம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ப வகுப்பறைகளுடனும், விளையாடுவதற்கு தேவையான இட வசதிகளுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது.
பெரிய இடமே மகிழ்ச்சி
வீடு, பள்ளிக்கூடங்கள், கல்லூரி என்பதனையும் கடந்து பல்கலைக்கழகங்களில் படிப்பது பெரும்பாலான பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான அடிப்படைக்காரணம் தாராளமான வசதிகளுடன் கூடிய அவற்றின் வளாகங்களாகும். இயற்கை சூழ்ந்த இடமும், அகன்ற இடங்களும் மனதிற்கு உற்சாகத்தை தருபவையாக இருப்பதால் கல்வி கற்பதில் ஆர்வம் இயற்கையாகவே கூடுகிறது.
மேலும் அடிப்படையாகவே அதிக அளவில் இடங்கள் இருப்பதன் மூலம் கடமைப்புகள் திருப்திகரமான அளவில் ஏற்படுத்துவதற்கு உதவி புரிகின்றன. அதிகமான பாடங்கள் கற்றுக்கொடுப்பதற்கும், அதிக மாணவர்கள் கல்வி கற்பதற்கும், தங்கும் வசதிகள், விளையாட்டு கூடங்கள், பொழுது போக்கு அம்சங்கள், ஆய்வக வசதிகள், நூலகங்கள் என தற்போதைய தேவைகளுக்கு ஏற்பவும், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற வகையில் விரிவுபடுத்துவதற்கும் அதிகமான இட வசதிகள் துணை புரிகிறது.
உலக அளவில் அதிக அளவிலான இட வசதிகளை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ளன. அதிக இட வசதிகளை வைத்துள்ள பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்குவதோடு, மாணவர்களால் விரும்பப்படும் இடங்களாகவும் இருக்கின்றன என்பது கூடுதலான தகவல்.
பல்கலைக்கழகங்களும், அமைவிட அளவும்
ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகம் - 8,180 ஏக்கர்.
நஹார்வர்டு பல்கலைக்கழகம் - 5,076 ஏர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி - 3,900 ஏர்.
ஐதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத் - 2,324ஏர்.
கார்னெல் பல்கலைக்கழகம் - 2,300 ஏர்.
ஐ.ஐ.டி. காரக்பூர் - 22,00 ஏர்.
மிச்சிகன் பல்கலைக்கழகம் - 1,920 ஏர்.
இல்லியனாய்ஸ் பல்கலைக்கழகம் - 1,783 ஏர்.
டிசிங்குவா பல்கலைக்கழகம், சீனா - 1,463 ஏர்.
மேற்கண்ட பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் அமைவிடங்களைக் கொண்ட கல்வி நிலையங்களாகும். மேலும் இந்தியாவைப் பொறுத்த அளவில் திருப்பதி பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்றவை ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள இடத்தில் அமைந்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 975 ஏக்கர்களைக் கொண்டுள்ளது. பொதுவான பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து விவசாயப் பல்கலைக்கழகங்களைக் கணக்கில் கொண்டால் அவையும் பெரிய அளவிலான இடத்தில் அமைந்துள்ளது. பஞ்சாபின் ஜி.பி. பண்ட் விவசாய மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழகம் போன்றவை அதில் குறிப்பிடத்தகுந்தவைகள் ஆகும்.

