/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வணிக மேலாண்மை - சில கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்
/
வணிக மேலாண்மை - சில கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்
வணிக மேலாண்மை - சில கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்
வணிக மேலாண்மை - சில கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்
நவ 25, 2014 12:00 AM
நவ 25, 2014 12:00 AM
பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, அவரின் தகுதியையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையிலான படிப்புகள் எவை?
பல கல்வி நிறுவனங்கள், எக்ஸிகியூடிவ் எம்.பி.ஏ., படிப்புகளை வழங்குகின்றன. இவை ஸ்பெஷலைஸ்டு படிப்புகளாகும். எனவே, இப்படிப்புகளை பணியின்போது பகுதி நேரமாகவோ அல்லது பணியிலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை விலகியிருந்து நேரடியாகவோ மேற்கொள்ளலாம்.
இப்படிப்பை மேற்கொள்ள பொதுவாக 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களே, உங்களின் படிப்பிற்கு செலவு செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். இல்லையெனில் நீங்கள்தான் செலவுசெய்ய வேண்டியிருக்கும்.
இதுபோன்ற படிப்புகள், ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவர் நிபுணத்துவம் பெற துணைபுரிகின்றன. இதுபோன்ற படிப்புகளைத் தவிர, பணிபுரியும் நபர்களுக்காக என்றே, பல கல்வி நிறுவனங்கள், பல சிறப்பு சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.
புதிய MBA பட்டதாரிகளிடமிருந்து நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் யாவை?
பொருளாதார சூழல் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் மாறியுள்ளது. எனவே, அதற்கேற்ப, மேலாண்மையின் பொறுப்புகள், கடமைகள் மற்றும் பணியின் தன்மைகள் உள்ளிட்டவற்றில் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன.
எனவே, வணிக நிறுவனங்கள், சரியாக வழிநடத்தும் திறனை மட்டும் பெறாது, தமக்கான ஒரு சுய நோக்கம் மற்றும் திட்டமிடலைப் பெற்றுள்ள நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஒரு நிறுவனத்திற்கு ஆட்களை பணியமர்த்தும் செய்லபாட்டில், ப்ரீ-ப்ளேஸ்மென்ட் டாக், சி.வி.ஸ்கிரீனிங், குரூப் டிஸ்கஷன், நேர்முகத் தேர்வு மற்றும் Offer கடிதம் வழங்குதல் உள்ளிட்டவை இடம்பெறும்.
பல நிறுவனங்கள், தாம் பணிக்கு எடுக்கும் புதிய எம்.பி.ஏ., பட்டதாரிகளிடம், நடப்பு நிகழ்வுகளைப் பற்றிய விழிப்புணர்வு, திறனாய்வு, தேவையான பண்புநலன், படைப்புத்திறன், பிரசன்டேஷன் திறமை, குழுப் பணி திறன், துறைப் பற்றிய நுணுக்கமான அறிவு மற்றும் மேலாண்மை கருத்தாக்கங்கள் உள்ளிட்டவை இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றன.
பொதுத்துறை நிறுவனப் பணிகளை, தனியார் நிறுவனப் பணிகளுடன் ஒப்பிட்டால்...
பொதுத்துறை நிறுவனப் பணிகள், ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை மற்றும் நிரந்தரமானவை என்ற போதிலும், அவற்றில் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் ஆர்வமூட்டும் அம்சங்கள் உள்ளிட்டவை, தனியார் நிறுவனப் பணிகளுடன் ஒப்பிடுகையில் குறைவே.
சாதிக்க துடிக்கும் பல மேலாண்மை பட்டதாரிகள், தங்களின் திறன்களை நிரூபித்து, சிறப்பான நிலையை அடையும் வாய்ப்புகள், தனியார் துறைகளில்தான் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தனியார் துறைகளுக்கு செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், வங்கிகள், எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கின்றன. அதேசமயம், வங்கித்துறையை எடுத்துக் கொண்டால், SBI CAPS தவிர, இதர வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இல்லை. ஆனால், இதர பொதுத்துறை நிறுவனங்களான, HPCL, BPCL, SAIL and GAIL போன்றவை, ஐ.ஐ.எம்.,கள் உள்ளிட்ட நாட்டின் முன்னணி வணிகப் பள்ளிகளுக்கு அதிகளவில் வருகை தந்து, தங்களுக்கான ஆட்களை பணியமர்த்திக் கொள்கின்றன.
எனவே, மேலாண்மை பட்டதாரிகளுக்கு, பொதுத்துறை நிறுவனங்களில் நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாகிறது. அதேசமயம், இந்த நிறுவனங்களில் ஒருவருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை, அவரின் திறமை மற்றும் செயல்பாட்டை சார்ந்திராமல், அவர் எத்தனை வருடங்களாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்ற பணி அனுபவம் சார்ந்தே கிடைக்கிறது என்பது ஒரு பெரிய குறையாக உள்ளது என்கின்றனர் சில நிபுணர்கள்.

