தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஜெயமுண்டு பயமேன்?

ஜெயமுண்டு பயமேன்?

ஜெயமுண்டு பயமேன்?


ஏப் 25, 2016 12:00 AM

ஏப் 25, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 25, 2016 12:00 AM ஏப் 25, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எப்போதும் வெற்றியின் அடையாளங்களாக விளங்குபவை முகமலர்ச்சி, பொலிவு, நிதானம், மனநிறைவு, புன்னகை மற்றும் உற்சாகம். இவையெல்லாம் ஒருவருக்கு எப்போது புலப்படும் என்றால் வாழ்வில் பயமில்லா நிலையில் தான்!

‘முதலில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பின்னர் நீங்கள் செயலில் இறங்க வேண்டும்’ என்று பொதுவாகக் கூறப்படுவது தவறு. பயத்துடன் இருக்கும்போது நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருந்துதான் துணிச்சல் பிறக்கிறது.

சின்னப் பிரச்சினைகூட உங்களை கவலையில், பயத்தில் அழுத்தினால் பெரிய வாய்ப்புகளை உங்களால் ஒருபோதும் சமாளிக்க முடியாது. ‘இந்தவழி மூடப்பட்டுள்ளது’ என்ற சாலை அறிவிப்பு நம்பாதையை மாற்றலாம், போய்ச்சேர நினைக்கும் இடத்தை மாற்றாது அல்லவா?

விதைத்த நெல்லைவிட விதைக்காத புல் வேகமாக வளர்கிறது. அப்படித்தான் ‘நெகடிவ்’ எண்ணங்கள். ‘பீல் த பியர் அண்ட் டூஇட் எனிவே’ என்றோர் புத்தகம்கூட உள்ளது.

பல நூறு பேருக்கு முன்னாள் பேசுவதற்கு, நீங்கள் மதிக்கும் ஒரு நபரை முதன்முதலாக சந்திக்கும்போது, தெரியாத விஷயம் பற்றி அறிவாளிகள் முன்பு பேச, பலர் முன்பு பாட அல்லது ஆட, என்று உங்களில் பலருக்கு பல விஷயங்கள் பயமுறுத்தக் கூடும். ‘அச்சம் இல்லாத அறிவிலிகள், அச்சம் நிறைந்த அறிவாளியைவிட நிறைய காரியம்செய்து முடிப்பான்’ என்கிறார் ஓர் அறிஞர். மலைகூட மலைப்பாகத் தெரியாது; பனியிலும் பளிங்கு போல் நம்மால் காணமுடியும்; பயம் இல்லாத ஒருநிலை இருந்துவிட்டால், தன்னம்பிக்கை பிறந்துவிட்டால்...

முன்கூட்டியே உங்களைத் தயார்படுத்திக் கொள்வது பயத்தின் தீவிரத்தை வெகுவாகக் குறைக்கிறது. உங்களுடைய தேர்வு அல்லது சொற்பொழிவிற்கு முன்னால் நீங்கள் எவ்வளவு அதிகச் சிறப்பாக உங்களைத் தயார்படுத்தி இருக்கிறீர்களோ, அவ்வளவு குறைவான பயமே உங்களுக்கு இருக்கும் என்பதை உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் நேரே இலட்சியத்தை நோக்கிச் செல்வது என்று தீர்மானித்தால் அதனால் என்ன கஷ்டம் வந்தாலும், எத்தனை கசப்பான விஷயங்களைச் சந்திக்கவேண்டியிருந்தாலும் நேரே செல்ல உறுதிகொண்டால் தொல்லைகள் குறையும்; அச்சமின்றி உறுதியோடு நின்றால் தடைகளெல்லாம் மறைந்துவிடும்!

ஒவ்வொரு பயமும் ஏதேனும் இழந்து விடுவோம் என்பது பற்றியதே. மரியாதை, மதிப்பை இழந்துவிடுவோம் என்கிற பயம். மற்றவர் பாராட்டை இழந்துவிடுவோம் என்ற பயம். இப்படிப்பட்ட பயத்தின் காரணிகள் என்ன தெரியுமா? தன்னம்பிக்கையின்மை மற்றும் தன்னை நம்பாமை இவையே!

இந்தப் பயத்தை விரட்டி வாழ்வை வெல்ல வேண்டும். தோல்வி பற்றிய பயத்தை விரட்ட வேண்டும். வெட்கம் நேரிடும். துக்கம் நேரிடும். ஏமாற்றம் கிடைக்கும் என்பதையெல்லாம் தவிர்த்துப் புதிய முயற்சிகளில் துணிந்து இறங்க வேண்டும்.

புத்திசாலி அனைத்தும் தெரிந்துவைத்திருக்கிறான். சாமர்த்தியசாலி அனைவரையும் தெரிந்து வைத்திருக்கிறான். வாழ்க்கையில் மகிழ்ச்சியை விரும்புவன் பயம் விலக்கிய புத்திசாலியாகவும், வெற்றியின் யுக்திகள் அறிந்த சாமர்த்தியசாலியாகவும் இருக்கிறான். வெற்றியின்போது பணிவும், தோல்வியின்போது துணிவும் காட்டும் ஒரு ‘கூல் தோனி’யாக நீங்களும் மாறுங்களேன்!

-முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us