தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/காமன்வெல்த் உதவித்தொகை!

காமன்வெல்த் உதவித்தொகை!

காமன்வெல்த் உதவித்தொகை!


ஏப் 29, 2016 12:00 AM

ஏப் 29, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 29, 2016 12:00 AM ஏப் 29, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காமன்வெல்த் நாடுகளில் செலவின்றி உயர்கல்வி படிக்கும் அரிய வாய்ப்பை வழங்குகிறது, ‘காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் பெல்லோஷிப் பிளான்’ (சி.எஸ்.எப்.பி.,) எனும் உதவித்தொகை திட்டம்!

காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த கல்வியில் சிறந்த மாணவர்கள், பிற காமன்வெல்த் நாடுகளில் முதுநிலை அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ள ‘பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது’ என்பதற்க்காக, 1959ம் ஆண்டு துவங்கப்பட்டது தான், ‘சி.எஸ்.எப்.பி.,’

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், கல்விக்கட்டணம், போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, உணவு உள்பட எந்த செலவையும் ஏற்க வேண்டியதில்லை!

சிங்கப்பூர்
அறிவியல் மற்றும் பொறியியல் பாடப் பிரிவில் ஆராய்ச்சி (பிஎச்.டி.,) படிப்பை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், சி.எஸ்.எப்.பி., உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜி.ஆர்.ஜி., மற்றும் டோபல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ’கேட்’ தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

மேலும் விவரங்களுக்கு: www.nus.edu.sg

மலேசியா
அறிவியல், பொறியியல், விவசாயம், மீன்வளம், பொருளியல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி,  பயோடெக்னாலஜி, பயோ செக்யூரிட்டி அன்ட் புட் செக்யூரிட்டி, சுற்றுச்சூழல் ஆய்வு, நர்சிங் அல்லாது மருத்துவம் மற்றும் பார்மசி ஆகிய பாடங்களில் முதுநிலை அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 26 மலேசிய பல்கலைக்கழகங்களில் காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு: அதிகபட்ச வயது 45

தகுதிகள்: உரிய கல்வித்தகுதியுடன், மொழிப் புலமை தேர்வுகளான ’டோபல்’ அல்லது ‘ஐ.இ.எல்.டி.எஸ்.,’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: biasiswa.mohe.gov.my

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us