sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தரமான கல்வியே கல்லூரிகளின் கடமை!

/

தரமான கல்வியே கல்லூரிகளின் கடமை!

தரமான கல்வியே கல்லூரிகளின் கடமை!

தரமான கல்வியே கல்லூரிகளின் கடமை!


ஜூலை 25, 2016 12:00 AM

ஜூலை 25, 2016 12:00 AM

Google News

ஜூலை 25, 2016 12:00 AM ஜூலை 25, 2016 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய காலக்கட்டத்தில் எந்த விஷயத்திலும், தரத்தை பற்றித்தான் நாம் அதிகம் சிந்திக்கிறோம், பேசுகிறோம். கல்வி நிறுவனங்களையும் தரத்தின் அடிப்படையில் தான் தேர்வு செய்கிறோம்!

ஒரு கல்லூரியின் தரத்தை நிர்ணயிப்பது அதன் உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்ல! பொதுவாக, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் தான் பெற்றிருக்கின்றன. தரமான கல்வியை அளிப்பதில் முக்கிய பங்கு சிறந்த ஆசிரியர்களுக்குத்தான்!

சிறந்த ஆசிரியர்களுக்கு அடுத்ததாக, படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனவே, ஒரு மாணவன் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற என்னென்ன தகுதிகள் தேவையோ, அவற்றையெல்லாம் கல்வி நிறுவனங்கள் கற்பிக்க விளைகின்றன.

சிறந்த வேலைவாய்ப்பை, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள் அளிக்கின்றன என்பதால் தான், அவைகளில் சேர்க்கை பெற மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சம்ங்கள் இரண்டு: அரசு ஏற்று நடத்தும் இக்கல்வி நிறுவனங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கப்படுவதால், அவற்றால் பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் எளிதல் ஒப்பந்தம் செய்ய முடிகிறது. மற்றொன்று, இக்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கப்படுவதே, கல்வியில் சிறந்து விளங்கும் தரமான மாணவர்களுக்கு மட்டும்தான்!

இந்த காரணங்களால், இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, உயர்ந்த ஊதியத்தில் வேலை வழங்க, உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன.

தனியார் கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, சிறந்த மாணவர்கள் மட்டுமே சேருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அனைத்து நிலைகளில் உள்ள மாணவர்களுக்கும் தரமான கல்வி அளிப்பது கல்வி நிறுவனங்களின் கடமை. அதை எங்கள் கல்வி நிறுவனம் திறம்பட செய்து வருகிறது!

மாணவரது கடமை

இன்ஜினியரிங் படிப்பு என்று முடிவு செய்து கல்லூரியில் சேர்ந்த பிறகு, ஒரு இன்ஜினியருக்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வதில், மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டியது மாணவர்களது கடமை. தரமான மாணவர்களுடன் தோழமையை வளர்த்துக்கொண்டு, பல துறைகளில் திறன்களை மேம்படுத்த, அவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும். அடுத்ததாக, பெற்றோருக்கும் ஒரு முக்கிய கடமை உண்டு. மாணவர்கள் நல்வழியில் செல்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணிப்பது தான் அது!

-கே.லோகநாதன், தலைவர், நியு பிரின்ஸ் கல்வி குழுமம், சென்னை.






      Dinamalar
      Follow us