தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிரான்ஸ்சில் படிக்க ஈபிள் உதவித்தொகை!

பிரான்ஸ்சில் படிக்க ஈபிள் உதவித்தொகை!

பிரான்ஸ்சில் படிக்க ஈபிள் உதவித்தொகை!


நவ 12, 2016 12:00 AM

நவ 12, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 12, 2016 12:00 AM நவ 12, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் சிறந்த மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், பிரஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் தொடங்கப்பட்டது தான், ‘ஈபிள் உதவித்தொகை திட்டம்’!

பாடத்திட்டம்: பாட நுணுக்கங்களை, கள ஆய்வு முறையில் மாணவர்களுக்கு கற்று கொடுப்பதால், அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள், சர்வதேச சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பது சிறப்பம்சம்.

படிப்புகள்: பொறியியல், அறிவியல், பொருளாதாரம், மேலாண்மை, சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளின்கீழ், இயற்பியல், வேதியியல், கணிதம், நேனோ டெக்னாலஜி, பயோடெக்னாலஜி, எர்த் சயின்ஸ், லைப் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், இன்பர்மேஷன் அண்ட கம்யூனிகேஷன் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம்.

வயது வரம்பு: முதுநிலை படிப்புக்கு 30 வயதுக்கு மிகாமலும், ஆராய்ச்சி படிப்புக்கு 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

தகுதிகள்: விண்ணப்பிக்கும் துறைகளுக்கு ஏற்ற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கால அளவு: முதுநிலை பட்டப்படிப்பில், மாணவர்கள் தேர்வு செய்யும் படிப்பு மற்றும் பாடப்பிரிவை பொறுத்து, 36 மாதங்கள் / 24 மாதங்கள் / 12 மாதங்கள் என உதவித்தொகை காலம் வேறுபடுகிறது. பிஎச்.டி., படிப்புக்கு 10 மாதங்கள் வரை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனினும், விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உதவித்தொகையின் கால அளவு கூடுதலாக 2 மாதங்கள் நீட்டிக்கப்படலாம்.

உதவித்தொகை: முதுநிலை படிப்புக்கு, மாதாந்திர செலவுக்கு ரூபாய் 86 ஆயிரம், பராமரிப்பு செலவுக்கு ரூபாய் 75 ஆயிரம், மாதாந்திர ஊக்கத்தொகை ரூபாய் 10 ஆயிரம் மற்றும் சர்வதேச போக்குவரத்து செலவு ஒரு முறை மட்டும்; பிஎச்.டி.,படிப்புக்கு, மாதாந்திர செலவுக்கு ரூபாய் 1 லட்சம் மற்றும் சர்வதேச போக்குவரத்து செலவு ஒரு முறை மட்டும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.campusfrance.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us