தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டிஜிட்டல் மார்க்கெட்டிங்!

டிஜிட்டல் மார்க்கெட்டிங்!

டிஜிட்டல் மார்க்கெட்டிங்!


டிச 05, 2016 12:00 AM

டிச 05, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 05, 2016 12:00 AM டிச 05, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வருகையாலும், அதற்கு அனைத்து தரப்பிலும் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பாலும், ஏராளமான வணிக நிறுவனங்கள், அவர்களது மார்க்கெட்டிங் யுத்தியில், டிஜிட்டலுக்கும் பிரதான இடம் அளித்து வருகின்றன. அதனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்பும் கணிசமாக அதிகரித்துவருகிறது!

முக்கியத்துவம்: ஒரு பொருளையும் உற்பத்தி செய்வதால் மட்டும் எந்தயொரு நிறுவனமும் வருமானம் ஈட்டிவிட முடியாது. சந்தையில் பிரபலப்படுத்தி, மக்கள் அந்த பொருளை வாங்கச் செய்வது என்பது மிகவும் முக்கியமானதும், சவாலானதும் கூட. அதில், கடந்த சில ஆண்டுகளாக, பெரும் வணிக நிறுவனங்கள் முதல் சிறு சிறு விற்பனையாளர்கள் வரை, அவர்களது பொருட்களுக்கான விளம்பரங்களை தாங்கும் தளமாக மட்டுமல்லாமல், அவர்களது பொருட்களையே விற்கும் தளமாகவும் ‘டிஜிட்டல்’ துறை திகழ்கிறது!

படிப்புகள்: ஏராளமான வாய்ப்புகள் மிகுந்த இத்துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்கள், ‘டிஜிட்டடில் மார்க்கெட்டிங்’ தொழில்முறை படிப்பினை மேற்கொள்வதன் மூலம், துறை சார்ந்த அறிவுத்திறன்களையும் மற்றும் மார்க்கெட்டிங் யுத்திகளையும் மெருகேற்றிக் கொள்ளலாம். சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளாவும் இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சர்ச் இன்ஜின் மார்க்கெட்டிங் (எஸ்.இ.எம்.,): இணையதளங்களில் எவ்வாறு விளம்பரங்களை திறம்பட வெளியிடுவது என்பதை எஸ்.இ.எம்., சான்றிதழ் படிப்பின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் (எஸ்.இ.ஒ.,): பல்லாயிரக்கணக்கான வலைத்தளங்களை நொடியில் தேடித்தரும் ‘கூகுள்’ போன்ற ‘சர்ச் இன்ஜின்’களில் குறிப்பிட்ட வலைத்தளங்களை மட்டும் முதன்மை வரிசையில் எவ்வாறு இடம்பெறச் செய்வது, என்பதை பற்றி விரிவாக எஸ்.இ.ஒ., மூலம் அறிந்து கொள்ள முடியும்.

வெப் அனலட்டிக்ஸ் (இணைய பகுப்பாய்வு): மக்களின் பயன்பாட்டை பொறுத்து, டிஜிட்டல் மிடியாவில் இருந்து பெறப்படும் அளவீட்டை ஒப்புகைப்படுத்தி, வணிக ரீதியான முடிவுகளை எடுக்க இது மிகவும் உதவுகிறது.

இ-மெயில் மார்க்கெட்டிங்: தற்போதைய இளைய தலைமுறையினர்களில், ‘இ-மெயில் கணக்கு இல்லாதவர்களே இல்லை’ என்ற நிலை உருவாகி வருகிறது. இந்த பிரம்மாண்ட தொழில்நுட்ப வளர்ச்சியால், இ-மெயில் விளம்பரங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன.

சோசியல் மீடியா மார்க்கெட்டிங்: பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மிக அதிகளவில் இருப்பதால், பல்வேறு வணிக நிறுவனங்கள், தங்களின் விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். எந்த தொழில்நுட்பத்தில், எந்த நேரத்தில், எந்த சமூக வலைத்தளத்தில், எப்படி விளம்பரங்களை வெளியிடுவது என்பதை பற்றி கற்பிக்கும், ‘சோசியல் மீடியா மார்க்கெட்டிங்’ படிப்பை இன்று பலர் தேர்வு செய்கின்றனர்.

கல்வி நிறுவனங்கள்:
இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் - மார்க்கெட்டிங் அண்ட் அனலட்டிக்ஸ் பார் இ-காமர்ஸ்
ஐ.ஐ.எம்.,பெங்களூரு - டிஜிட்டல் மார்க்கெட்டிங் பார் பிசினஸ் குரோத்,
ஐ.ஐ.எம்., கேலிக்கெட்- இ-காமர்ஸ் அண்ட் இன்டர்நெட் மார்க்கெட்டிங்

குறிப்பு: ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் உலகம் முழுவதும் செயல்படும் நிலையில் மாணவர்கள், தரமான கல்வி நிறுவனத்தை, ஆராய்ந்து தேர்வு செய்வதே சிறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us