தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புதுமை படைக்கும் மருத்துவ சுற்றுலா!

புதுமை படைக்கும் மருத்துவ சுற்றுலா!

புதுமை படைக்கும் மருத்துவ சுற்றுலா!


டிச 10, 2016 12:00 AM

டிச 10, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 10, 2016 12:00 AM டிச 10, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவ வசதி குறைபாடு, குறிப்பிட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை, குறைந்த மருத்துவ செலவுகள் உள்ளிட்ட காரணங்களால், இன்று பலர் வெளிநாட்டிற்கு பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த மருத்துவ பயணங்கள், மருத்துவ சுற்றுலா அல்லது உடல், ஆரோக்கிய சுற்றுலா என அழைக்கப்படுகிறது!

நோய்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களை தேர்வு செய்து தருதல், ஒரு நாட்டின் அல்லது மருத்துவமனையின் மருத்துவ வசதிகளை ஆராய்ந்து அளித்தல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை தீர்த்தல் போன்ற பணிகளை  மருத்துவ சுற்றுலா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

கிரீஸ், தென் ஆப்ரிக்கா, ஜோர்டான், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மருத்துவ சுற்றுலா துறையில் சிறந்து விளங்குகின்றன.

படிப்புகள்

டிராவல் அண்ட் டூரிசம் துறையில், ‘ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்’ மற்றும் ‘மெடிக்கல் டூரிசம்’ படிப்புகள், தற்போது பிரபலமடைந்து வருகின்றன. முதுநிலை பட்டப்படிப்பில் எம்.எஸ்சி., - ஹெல்த்கேர் அண்ட் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேசன், எம்.பி.ஏ., - ஹெல்த் மேனேஜ்மெண்ட், எம்.பி.ஏ., - டிராவல் அண்ட் டூரிசம் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர, பல்வேறு முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இவற்றிற்கு விண்ணப்பிக்க மாணவர்கள், ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் திறன்கள்

மருத்துவ சுற்றுலா துறையை தேர்வு செய்யும் மாணவர்கள், சிறந்த தகவல் தொடர்பியல் திறனும், தலைமைப் பண்பும் பெற்றிருப்பது அவசியம். மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள எந்த தரமான மருத்துவமனைகள், மருத்துவ சுற்றுலாவை அனுமதிக்கின்றன, என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பதும் அவசியமானது.

விரல் நுணியில் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள், அதன் தரம், மருத்துவ சுற்றுலாவுக்கான சட்ட வழிமுறைகள், மருத்துவ விசா தொடர்பான விதிகள் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்வதுடன், அவற்றை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பவர்களால், இந்த துறையில் நிச்சயம் சாதிக்க முடியும்.

வாய்ப்புகள்

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் நிறைந்த துறைகளில் மருத்துவ சுற்றுலா துறையும் ஒன்று. வாடிக்கையாளர்களை கையாளுதல், மருத்துவ உதவி சேவை பிரிவு, விற்பனை மற்றும் வணிகம் சார்ந்த பிரிவுகள், சர்வதேச வணிக பிரிவுகள், நிதி மற்றும் நிர்வாகம், மருத்துவ காப்பீடு மற்றும் ஏவியேஷன் இன்டஸ்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பெரும் அளவில், துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் ஸ்டடிஸ், கேரளா
ஐ.சி.ஆர்.ஐ., டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு
குளோபல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், குஜராத்
இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஹெல்த் அண்ட் ஹைஜினிக், டெல்லி
சிம்பயாசிஸ் சென்டர் ஆப் ஹெல்த்கேர் - ஒரு ஆண்டு பட்டய படிப்பு
அப்பலோ ஹாஸ்பிடல் - சான்றிதழ் படிப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us