தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிரத்யேக எம்.பி.ஏ., படிப்பு!

பிரத்யேக எம்.பி.ஏ., படிப்பு!

பிரத்யேக எம்.பி.ஏ., படிப்பு!


ஜன 02, 2017 12:00 AM

ஜன 02, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 02, 2017 12:00 AM ஜன 02, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனித்திறமையை வளர்க்கும் துறைகளில் மேலாண்மையும் ஒன்று! ஆதலால் தான், மாணவர்கள் மத்தியில் இத்துறை சார்ந்த பட்டப்படிப்புகள் பெறும் வரவேற்பை பெற்றுள்ளன!

முக்கியத்துவம்
பொதுவாக, இளநிலை பட்டம் பெற்ற பெரும்பாலானோர் முதுநிலை பட்டப்படிப்பான, இரண்டு ஆண்டுகள் கொண்ட எம்.பி.ஏ., படிப்பை விரும்பி படிக்கின்றனர். பொறியியல், சட்டம், மருத்துவம் என எந்த படிப்பை படித்தவர்களுக்கும் மேலாண்மை திறன் அவசியம் என்பதால், எந்த துறையை சார்ந்தவர்களும் எம்.பி.ஏ.,வை ஆர்வமுடன் தேர்வு செய்கின்றனர்.

சில மாணவர்கள், பள்ளி மேல்நிலைக் கல்வி முடிக்கும் முன்பே, எம்.பி.ஏ., படிப்பதென்று தீர்க்கமாக முடிவு செய்வதுண்டு. அத்தகைய மாணவர்களுக்காக, 5 ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

பிரத்யேக படிப்பு
நிதித்துறையில் நிபுணத்துவம் பெற விரும்பும் மாணவர்களுக்காக, பி.காம்.,(ஹானர்ஸ்) மற்றும் எம்.பி.ஏ.,(பினான்ஸ்) இணைந்த ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. முதல் மூன்று ஆண்டுகள் பி.காம்.,(ஹானர்ஸ்) பாடங்களும், அதன் பின் மீதம் உள்ள இரண்டு ஆண்டுகள் எம்.பி.ஏ., (பினான்ஸ்) பாடங்களும் இடம்பெறுகின்றன.

கல்வித்தகுதி
பிளஸ் 2வில் கணக்குப் பதிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எங்கு படிக்கலாம்
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் நிகர்நிலை பல்கலைக்கழகமான, ஸ்ரீ சந்திரசேகரேந்த்ரா சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா, இந்த பட்டப்படிப்பை வழங்குகிறது.

இன்ஸ்டிடியூட் ஆப் சார்டேர்ட் அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா, இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா, இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரி ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் வடிவமைத்திருப்பதாக, அக்கல்வி நிறுவனம் தெரிவிக்கிறது. இதன்மூலம், சி.ஏ., சி.எம்.ஏ., மற்றும் சி.எஸ்., போன்ற புரொபஷனல் தேர்வுகளுக்கு பிரத்யேக பயிற்சி எடுக்க வேண்டிய அவசியமில்லை.

வேலைவாய்ப்புகள்
பி.காம்.,(ஹானர்ஸ்) எம்.பி.ஏ., பினான்ஸ் முடித்தவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. குறிப்பாக, வங்கிப் பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பல வெளிநாட்டு வங்கிகளிலும், அவற்றின் இந்திய கிளைகளிலும் மற்றும் சர்வதேச வங்கிகளிலும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும், நிதி சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us