பிப் 28, 2017 12:00 AM
பிப் 28, 2017 12:00 AM
சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, தேசிய அளவில் நடத்தப்படும் ‘கிளாட்’ எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது நாம் அறிந்ததே!
இதுதவிர, பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பிரத்யேகமாக சட்ட நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இவற்றில் முக்கிய நுழைவுத்தேர்வுகளின் விபரம் இதோ...
ஆல் இந்தியா லா என்டரன்ஸ் டெஸ்ட்(ஏ.ஐ.எல்.இ.டி.,): நேஷனல் லா யூனிவர்சிட்டி (என்.எல்.யு.,) வழங்கும், பி.ஏ.-எல்.எ.ல்பி., மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு.
தகுதிகள்: பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயதிற்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., மாணவர்களுக்கு வயது வரம்பு சலுகை உண்டு.
தேர்வு முறை: ஆங்கிலம், பொது அறிவு, கணிதம், லாஜிகல் ரீசனிங் மற்றும் லீகில் ஆப்டிடியூட் போன்ற பகுதிகளில் இருந்து 150 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை.
விபரங்களுக்கு: www.nludelhi.ac.in
இந்திரபிரஸ்தா யூனிவர்சிட்டி காமன் என்டரன்ஸ் டெஸ்ட் (ஐ.பி.யு. சி.இ.டி.,- எல்.எல்.பி.,): குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், இளநிலை சட்டப் படிப்பில் உள்ள 2,360 இடங்களுக்காக நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வு!
தகுதிகள்: ஆங்கில மொழியை ஒரு பாடமாக பயின்று பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., மாணவர்களுக்கு வயது வரம்பு சலுகையும் உண்டு.
தேர்வு முறை: மல்டிபில் சாயிஸ் அடிப்படையில் ‘அப்ஜெக்டிவ்’ வடிவில், ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங் மற்றும் லீகல் ஆப்டிடியூட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விபரங்களுக்கு: www.ipu.ac.in
சிம்பியாசிஸ் என்டரன்ஸ் டெஸ்ட் (எஸ்.இ.டி.,- லா): சிம்பியாசிஸ் இன்டர்னல் யூனிவர்சிட்டி, சட்டப்படிப்பில் உள்ள 720 இடங்களுக்காக நடத்தும் நுழைவுத்தேர்வு.
தகுதிகள்: பிளஸ் 2 பொது தேர்வில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 20க்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., மாணவர்கள் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: லாஜிகல் ரீசனிங், லீகல் ரீசனிங், அனலட்டிகல் ரீசனிங், ரீடிங் காம்பிரிஹென்ஷன் மற்றும் பொது அறிவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
விபரங்களுக்கு: www.symlaw.ac.in
யு.பி.இ.எஸ்., லா ஸ்டடீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் (யு.எல்.எஸ்.ஏ.டி.,): இது, டேராடூனில் உள்ள யு.பி.இ.எஸ்., பல்கலைக்கழகம் நடத்தும் இந்த சட்ட நுழைவுத் தேர்வு.
தகுதிகள்: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 20க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைனில் 3 மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். லாங்வேஜ் காம்பிரிஹென்ஷன், நியூமரிக்கல் எபிலிட்டி, லாஜிகல் ரீசனிங், லீகல் ஜெனரல் நாலேஜ் மற்றும் லீகல் ஆப்டிடியூட் போன்ற பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
விபரங்களுக்கு: www.upes.ac.in
பஞ்சாப் யுனிவர்சிட்டி என்டரன்ஸ் எக்சாமினேஷன்: பஞ்சாப் மாநில பல்கலைக்கழகம், இளநிலை சட்டப்படிப்பில் தகுதியான மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு!
தகுதிகள்: பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களின் வயது 20க்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மானவர்கள் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஜெனரல் நாலேஜ் அண்ட் கரன்ட் அபயர்ஸ், லீகல் ஆப்டிடியூடு, மென்டல் ஆப்டிடியூட், இங்கிலீஷ் காம்பிரிஹென்ஷன் மற்றும் ரைட்டிங் ஸ்கில் போன்ற பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் பிடித்தம் செய்யப்படும்.
விபரங்களுக்கு: http://puchd.ac.in/
பிற சட்ட நுழைவுத் தேர்வுகள்:
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (ஏ.எம்.யு.,- பி.ஏ.எல்.எல்.பி.,)
அலகாபாத் பல்கலைக்கழகம் (எல்.எப்.ஏ.டி.,)
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பி.எல்.ஏ.டி.,)
பாரதி வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (பி.வி.பி.,-செட் லா)
கல்கத்தா பல்கலைக்கழகம் (பி.ஏ.எல்.எல்.பி.,)
கொச்சின் பல்கலைக்கழகம் (சி.யு.எஸ்.ஏ.டி.,-சேட்)
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் (ஜே.எம்.ஐ., பி.ஏ.எல்.எல்.பி.,)
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டிரைனிங் (கே.ஐ.ஐ.டி.இ.இ.,-லா)
