தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/உண்மையை உணர்வோம்!

உண்மையை உணர்வோம்!

உண்மையை உணர்வோம்!


மார் 06, 2017 12:00 AM

மார் 06, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 06, 2017 12:00 AM மார் 06, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தெரிந்த விஷயங்களை ஒதுக்கிவிடுவதே மிகப்பெரிய தோல்விக்கு நம்மை இட்டுச்செல்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய, சிறிய விசயங்களையும் கணக்கில் கொள்வதில் தான் நமது வெற்றி உறுதி செய்யப்படுகிறது!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், முதலில் பத்து மதிப்பெண் கேள்விக்கான விடையை மணிக்கணக்காக எழுதுவார்கள். கடைசி பத்து நிமிடம் இருக்கும் போது, நன்கு தெரிந்த ஒரு மதிப்பெண் வினாக்களை எழுதத் தொடங்குவார்கள். நேரம் குறைவு காரணமாக, அவசரத்தில் பதற்றமடைந்து தெரிந்த அந்த வினாக்களுக்கான விடையையும் மறந்துவிடுவார்கள் அல்லது தவறாக எழுதி விடுகிறார்கள்.

இது தெரிந்தே செய்யும் தவறு. எதை உணர வேண்டுமோ அதை உணராமல் விடுதலே தோல்விக்கு முதல் காரணம்!

அறிய முடியாததை அறிவது உயர்வு. ஆனால் அறிய முடிந்ததைக் கூட அறியாதது நோயாகும்! இதனை தான் வேதாந்தம் ‘அவரவரும் தமது நிஜமான திறன் என்ன என்பதை உணர்ந்து வைத்திருக்க வேண்டும்’ என்கிறது.

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று எப்போது உணர்கிறானோ அப்போதே அவன் ஞானியாகிறான். குருஷேத்திர போரின் முதல்நாளில் துரியோதனன் தன் நிலை அறியாது, “பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோர் அடங்கிய இப்படையை இந்திராதி தேவர்களாலும் வெல்ல முடியாது” என ஆணவத்தால் கர்ஜித்தான்.

ஆனால் 18ம் நாளில் கங்கைக்கரையில் தனியே உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், படைத்தலைவர்கள், சேனைகள் என அனைவரையும் இழந்த நிலையில், “விதுரர் அன்றே சொன்னார். அது இன்று உண்மையாகி விட்டது” என்றான்.  போரின் முடிவை தெரிந்தும் அதனை மறந்து போரிட்டதே துரியோதனன் தோல்விக்கு காரணம்!

வெற்றிக்கான தொடக்கப்புள்ளி உண்மையை உணர்தலில் தான் இருக்கின்றது. அது நம்மை அழித்து விடும் எனத் தெரிந்தே செயல்படுவது தோல்விக்கான ஆரம்பம். உண்மை நிலையை உணர்ந்து, நமது எதிர்மறைகளை அடையாளம் கண்டு, அவற்றை முதலில் களையெடுக்க வேண்டும். அதற்கு, ஆழ்ந்த தேடல் மற்றும் முழு ஈடுபாடு கைகொடுக்கும்.

நமது திறனை உணர்ந்து, முழு ஈடுப்பாட்டுடன் மிகத்தீவிரமாக செயலில் ஈடுபட்டால், சிறிய தவறு கூட நம் கண்களுக்கு புலப்படும். அச்சிறிய தவறு மீதான கண்காணிப்பு, எந்த பெரிய தவறும் நடக்க இடம் தராது நடந்து கொள்ள நமக்கு தூண்டுதலாய் அமையும். 

தெரிந்த விசயம் தானே என புறக்கணிக்கும் சிறிய அலட்சியமே தோல்விக்கு வித்திடுகிறது. ஆகவே, உண்மையை உணர்வோம். உணரும் உண்மையை உதறாமல் உயர்வோம்!

-க.சரவணன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us