ஜூன் 24, 2017 12:00 AM
ஜூன் 24, 2017 12:00 AM
அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில், ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட சில படிப்பானது, மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து, வேலைவாய்ப்புகளில் புரட்சியை ஏற்படுத்தும். அந்த வகையில், தற்போது இன்ஜினியரிங் துறையில் மவுசு அதிகரித்திருக்கும் படிப்பு ‘சிக்னல் புராசசிங்’!
எதற்காக?
மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிக்னல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதயம், மூளையில் ஏற்படும் மின் மாற்றங்கள், ரேடார், சோனார் எதிரொலிகள், நிலநடுக்க அதிர்வு, தொடர்பியல், அணு அறிவியல், இமேஜ் புராசசிங், ஒலியியல், போன்ற ஆராய்ச்சிகளுக்கு சிக்னல்கள் தான் உதவுகின்றன. இது தொடர்பாக கிடைக்கும் தகவல்களை கம்ப்யூட்டர் உதவியுடன் புரிந்து கொள்ள உதவும் படிப்பு சிக்னல் புராசசிங்.
சென்சார் அரே சிக்னல் புராசசிங், மைக்ரோவேவ் சர்க்யூட்ஸ், எஸ்.ஏ.டபல்யூ., டிவைஸ் அண்ட் அப்பிகேஷன், டிஜிட்டல் கம்யூனிகேஷன், டி.எஸ்.பி., ஆர்க்கிடக்சர் அண்ட் அல்காரிதம் மற்றும் பேப்ரிகேஷன் டெக்னிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுடன் கள ஆய்வு பயிற்சிகள் வழங்கப்படும்.
முக்கியத்துவம்
டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் மற்றும் டிஜிட்டல் ஹாட்வேரில் முக்கியத்துவம் பெற்றது தான் சிக்னல் புராசசிங். இதில், டிஜிட்டல் சிக்னல் புராசசிங் மற்றும் அனலாக் சிக்னல் புராசசிங் என இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆடியோ அண்டு ஸ்பீச் சிக்னல் புராசசிங், சோனார் அண்டு ரேடார் சிக்னல் புராசசிங், சென்சார் அரே புராசசிங், ஸ்பெக்ட்ரல் எஸ்டிமேஷன், ஸ்டாடிஸ்டிக்கல் சிக்னல் புராசசிங், இமேஜ் புராசசிங், சிக்னல் புராசசிங் பார் கம்யூனிகேஷன் போன்ற துறைகளிலும் சிக்னல் புராசசிங் முக்கியத்துவம் பெறுகிறது.
பெரும்பாலும், எம்.இ., மற்றும் எம்.டெக்., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளாக, ‘சிக்னல் புராசசிங்’ படிப்பு வழங்கப்படுகிறது.
தகுதிகள்
பி.இ., அல்லது பி.டெக்., பட்டப்படிப்பில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ‘கேட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சிறந்த கல்வி நிறுவனங்கள்
பெங்களூரு தொழில்நுட்ப கல்லூரி
டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் டெக்னாலஜி, மகாராஷ்டிரா
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, புபனேஷ்வர்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,
மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சில கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன.
