தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எந்த வயதினரும் சட்டம் படிக்கலாம்!

எந்த வயதினரும் சட்டம் படிக்கலாம்!

எந்த வயதினரும் சட்டம் படிக்கலாம்!


ஜூன் 28, 2017 12:00 AM

ஜூன் 28, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 28, 2017 12:00 AM ஜூன் 28, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், சமீபத்திய தமிழக அரசு அறிவிப்பின்படி, தமிழக சட்டக்கல்லூரிகளில் அனைத்து சட்டப் படிப்புகளுக்கும் உச்ச வயது வரம்பு இல்லை. எனவே, எந்த வயதினரும் சட்டம் படிக்க முடியும்!

இதன்படி, தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு சட்டக் கல்லூரிகள், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்கள் ஆகியவற்றில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர எந்தவித வயது வரம்பும் இல்லை.

அரசு சட்டக் கல்லூரிகள்

தமிழகத்தில் செயல்படும் 10 அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: பி.ஏ.எல்.எல்.பி., (5 ஆண்டுகள்) மற்றும் எல்.எல்.பி., (3 ஆண்டுகள்).

தகுதிகள்: 5 ஆண்டு படிப்பில் சேர, பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு எல்.எல்.பி., படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

சட்டப் பல்கலைக்கழகம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் செயல்படும், ‘ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் இன் லா’ கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் தொலைநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை படிப்பு: 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ.எல்.எல்.பி., பி.பி.ஏ.எல்.எல்.பி., பி.சி.ஏ.எல்.எல்.பி., பி.காம்.எல்.எல்.பி, மற்றும் 3 ஆண்டுகள் கொண்ட எல்.எல்.பி., உள்ளிட்ட ஹானர்ஸ் படிப்புகள்.

தகுதிகள்: 5 ஆண்டு படிப்புகளுக்கு, பிளஸ் 2வில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. 3 ஆண்டு எல்.எல்.பி., படிப்புக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர்  55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

முதுநிலை படிப்பு: எல்.எல்.எம்.,

தகுதி: பி.எல்., அல்லது எல்.எல்.பி., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொலைநிலை படிப்பு: எம்.சி.எல்., பல்வேறு முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்

தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்சி பெற்றிருக்க வேண்டும்.

விபரங்களுக்கு: http://tndalu.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us