தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘சவால்களை சந்திப்பவர்கள் சாதிப்பார்கள்’

‘சவால்களை சந்திப்பவர்கள் சாதிப்பார்கள்’

‘சவால்களை சந்திப்பவர்கள் சாதிப்பார்கள்’


ஜூலை 20, 2017 12:00 AM

ஜூலை 20, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 20, 2017 12:00 AM ஜூலை 20, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டும் பல்வேறு விதமான படிப்புகளை படித்து முடித்து, சுமார் 4 லட்சம் பேர் கல்லூரியைவிட்டு வெளியேறுகின்றனர். ஆனால், அனைவருக்குமான வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது!

இந்நிலையில், இன்றைய மாணவர்கள் வேலைவாய்ப்பையே பெரிதாக எதிர்பார்த்து, உயர்கல்வி படிக்கிறார்கள். அந்தவகையில், முன்பு மிகப் பிரபலமாக இருந்த பொறியியல் படிப்பை, தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. நான்கு ஆண்டுகாலப் படிப்பு, கல்விக் கட்டணம் அதிகம், வேலை வாய்ப்பு குறைவு போன்ற காரணங்களால் தான் பொறியியல் படிப்பை தேர்வு செய்வதை விட கலை அறிவியல் படிப்பை படிக்கலாம் என்று நினைக்கின்றனர்.

தொழில் நிறுவனங்களும், பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பை வழங்குவதில்லை. தேசிய அளவில் திறமையான பொறியாளர்களுக்கான தேவை இருந்தாலும்கூட, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது. சாப்ட்வேர் பணியை மட்டுமே நம்பி இன்ஜினியரிங் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாப்ட்வேர் பணியும் தற்போது சர்வதேச அளவில் சரிவடைந்து வருவது கவலை அளிக்கிறது.

எவ்வளவு தேவையோ அந்த எண்ணிக்கையில் மட்டும் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்காமல், தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் பட்டதாரிகள் உருவாக்கும் வகையில் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதும், பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களை பெருக்கி, தொழில் வளர்ச்சி அடையும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தாதும் தான் தற்போதைய நிலைக்கான காரணங்கள்.

இத்தகைய காரணங்களால், பல பொறியியல் கல்லூரிகளில் போதிய மாணவர் சேர்க்கை தற்போது இல்லை. அத்தகைய கல்லூரிகள் இழுத்துமூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் இவற்றை உணர்ந்து இந்த நிலையை மாற்ற உரிய வழிவகை செய்ய வேண்டும். தற்போதைய சவாலான நிலை மாறி, வருங்காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகிறேன். தற்போதைய சவால்களை எந்த கல்லூரிகள் தாங்கி நிற்கின்றனவோ, அவை வருங்காலத்தில் சிறப்பான வளர்ச்சியை பெறும்!

பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. சிறப்பான கல்வி வழங்குவதுதான் கல்வி நிறுவனங்களின் பொறுப்பே தவிர, வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தருவது அல்ல!
 
இருந்தபோதிலும், பொறுப்பு இல்லை என்று, எங்கள் கல்வி நிறுவனம் தட்டிக்கழிப்பதில்லை. எங்கள் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும், சுயமாக சாதிக்கும் வகையிலும் உரிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறோம். சாப்ட் ஸ்கில்ஸ், சிறந்த பழக்க வழக்கங்கள், தொழில் நிறுவனங்களில் நடந்துகொள்ளும் விதம்,  விளையாட்டு என பல்வேறு திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கிறோம்!

-எஸ்.பீட்டர், தலைவர், மாதா கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us