தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தத்துவவியல் படிக்கலாம்!

தத்துவவியல் படிக்கலாம்!

தத்துவவியல் படிக்கலாம்!


ஆக 07, 2017 12:00 AM

ஆக 07, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 07, 2017 12:00 AM ஆக 07, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழ்வியல் தத்துவங்களை அறிந்து கொள்வதோடு, உலகின் தோற்றம் மற்றும் இயல்புத் தன்மையை கண்டறிய விரும்புபவர்கள், ‘பிலாசபி’ எனும் தத்துவவியல் துறையை தேர்வு செய்து படிக்கலாம்!

நல்லறிவை அறிதல், தர்க்கவியலுடன் நோக்குதல், மதிப்பீடு செய்தல், மனம் மற்றும் மொழி ஆகியவைத் தொடர்பான பொது மற்றும் அடிப்படை சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து, விளக்கங்களை விரிவாக பெறுதல் போன்றவை தத்துவவியல் படிப்பில் நாம் பெறும் சிறப்பம்சங்கள்.

என்ன படிக்கலாம்
பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலை தத்துவவியல் பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம். அதன்பின், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதுநிலை, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை தொடரலாம்.

மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், சமூகம், அரசியல், மதம் தொடர்பான சிக்கல்களை விரிவாக புரிந்து கொள்ளுதல், பிரபஞ்ச தோற்றம், இயக்கம் மற்றும் மனிதன் உட்பட உயிரினங்களின் வாழ்வு ஆகியவற்றை தர்க்க ரீதியாக புரிந்து கொள்ளுதல், படைப்பின் நோக்கம், உலகத்தின் தொடர் இயக்கப் போராட்டம், ஆதாரம் இல்லாத வரலாறுகளை தர்க்க ரீதியாக அலசுதல் மற்றும் விவாதங்கள் போன்ற பாடப்பிரிவுகள் தத்துவவியல் படிப்பில் இடம்பெற்றுள்ளன.
 
படிப்பின் சிறப்பு
தத்துவவியலில் பட்டம் பெற்றவர்கள் உலக தத்துவங்களைப் பற்றி ஒரு விரிவான அறிமுகத்தை பெறுவதால், சாதாரண வேலை வாய்ப்புகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. படைப்பாக்க தத்துவத் திறன் கொண்ட தத்துவவியல் பட்டதாரிகள், அவர்களது முயற்சிகளின் மூலமாகவே இத்துறையில் சாதிக்கலாம். புத்தகங்கள் எழுதுதல், வரலாற்று சொற்பொழிவு நிகழ்த்துதல், தொடர்ந்து ஆராய்ச்சி செய்தல், கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தல் போன்ற பல வாய்ப்புகள் உள்ள முக்கிய துறை.

தேவைப்படும் திறன்கள்
தத்துவப் பட்டப்படிப்பை விரும்பி படிக்கும் மாணவர்கள், கருத்து வளம், எதையும் ஆராய்ந்து சிந்திக்கும்  பகுப்பாய்வு திறன், சமூக சிக்கலுக்கு தீர்வு காணும் பொதுநல போக்கு, உலக நிகழ்வுகளை உற்று நோக்கும் திறன், நினைப்பதை சரியாக வெளிப்படுத்தும் திறன், பேச்சாற்றல் போன்ற திறன்களை வளர்த்து கொள்ளுவதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை பெறலாம்.

வாய்ப்புகள்
நுணுக்கமான சிந்தனையை வழங்கக் கூடிய படிப்பில் தத்துவவியலும் ஒன்று என்பதால், சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் மாநில அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதலாம். மனிதவளம், தொடர்பியல், எழுத்து மற்றும் கற்பித்தல் பணிகளிலும் வாய்ப்புகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us