ஆக 11, 2017 12:00 AM
ஆக 11, 2017 12:00 AM
அணுக்கள் பற்றியும், பிற அணுக்களுடனான இடைவினைகள் பற்றியும், ஆர்வம் குறையாமல் படிக்கத் தூண்டும் பகுதி ‘அறிவியலின் மையம்‘ எனப்படும் வேதியியல்!
வேதியியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தால், வேலைவாய்ப்பை பெறுவது கடினம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. அதனால், இத்துறை சாந்தபட்டப்படிப்பை மாணவர்கள் எடுத்து படிக்க யோசிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. தற்போது உள்ள சூழ்நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் வேதியியல் துறையை சார்ந்து இயங்குவதால், வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை என்கின்றனர், கல்வியாளர்கள்.
படிப்புகள்
இளநிலை படிப்பில், பிஎஸ்.சி.,-கெமிஸ்ட்ரி மற்றும் பிஎஸ்.சி.,-கெமிஸ்ட்ரி (ஹானர்ஸ்).
முதுநிலை படிப்பில் எம்எஸ்.சி.,- அனாலிடிக்கல் கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, நான்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி, பிசிக்கல் அண்ட் மெட்டீரியல் கெமிஸ்ட்ரி, ஹைட்ரோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூடேஷன் கெமிஸ்ட்ரி, பிசிக்கல் கெமிஸ்ட்ரி, டிரக் கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, நியூக்ளியர் கெமிஸ்ட்ரி, என்வைரான்மென்டல் கெமிஸ்ட்ரி, பார்மசூடிக்கல் கெமிஸ்ட்ரி போன்ற படிப்புகள் உள்ளன.
தகுதிகள்
இளநிலை பட்டப்படிப்புக்கு, பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புக்கு, வேதியியல் துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலன பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிக்க, வேதியியல் துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு
வேதியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்கள், இரசாயன ஆய்வகங்கள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், இரசாயன உற்பத்தி நிறுவனங்கள், பரிசோதனை ஆய்வுக்கூடங்கள், கழிவு நீர் ஆலைகள் போன்றவற்றில் பணி வாய்ப்பை பெறலாம்.
மேலும், டாபர், இந்துஸ்தான் லீவர், ரான்பாக்ஸி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்,மேயர் ஆர்கனிசஸ் பிரைவேட் போன்ற தனியார் நிறுவனங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இஸ்ரோ, பாபா அணு ஆய்வு மையம், இந்திய ரயில்வே துறை, ஓ.என்.ஜி.சி.,போன்ற நிறுவனங்களும் பெறும் அளவில் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டெல்லி
லயோலா கல்லூரி, சென்னை
மிராண்டா ஹவுஸ், டெல்லி
ஹன்ஸ்ராஜ் கல்லூரி, டெல்லி
பெர்குசன் கல்லூரி, மகாராஷ்டிரா
சென்னை கிறிஸ்துவ கல்லூரி, சென்னை
டெல்லி பல்கலைக்கழகம் இந்துக் கல்லூரி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, டெல்லி
சென்னை பல்கலைக்கழகம்,
யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, கொச்சின்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்களில் வேதியியல் படிப்பு வழங்கப்படுகிறது.
ஐ.ஐ.டி.,யிலும் படிக்கலாம்
மும்பை, டெல்லி, சென்னை, கான்பூர், குவஹாத்தி, காரக்பூர் மற்றும் ரூர்க்கி ஆகிய இடங்களில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் இளநிலை பி.எஸ்., மற்றும் ஒருங்கிணைந்த எம்எஸ்.சி., பட்டப்படிப்புகளுக்கு ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு மற்றும் முதுநிலை எம்எஸ்.சி., படிப்புகளுக்கு ஜெம் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
