ஆக 19, 2017 12:00 AM
ஆக 19, 2017 12:00 AM
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மறைந்து, மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் இணையதளத்தின் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில், திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது மாணவர்களின் கையில் தான் உள்ளது!
அவ்வாறு தனது திறனை வளர்த்துக்கொண்டு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய, 2015ம் ஆண்டு எங்கள் கல்லூரியில் பட்டம் முடித்த கவின் என்ற மாணவன், தற்போது ஜெர்மனியில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யு.,வில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் பணியாற்றுகிறார்!
மற்றொரு மாணவர் ராகுல், என்பவர் தயாரித்த ‘மொபைல் ஆப்’பைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஆப்பிள் நிறுவனம், அந்த மாணவனை அவர்களது நிறுவனத்திற்கே அழைத்து கலந்துரையாடியது. இவை, சாதாரண விஷயமல்ல. இந்த வெற்றியை சாதாரணமாக அனைத்து மாணவர்களாலும் பெற முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. அவ்வாறு அனைவராலும் எளிதாக பெற முடிந்தால் அது வெற்றியும் அல்ல. தேடல்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இதை யாரும் சொல்லித்தர முடியாது. எந்த புத்தகத்திலும் இருக்காது. அதேசமயம், மாணவர்களுக்கு ஊக்குவிப்பும் மிக அவசியமாகிறது.
தேர்ச்சி விகிதம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கடந்த ஆண்டு தேர்ச்சி முடிவுகளின்படி, எங்கள் கல்லூரி 97.44 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. 1132 மாணவ, மாணவிகளில் 1103 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு பேராசிரியரையும் 20 மாணவர்களுக்கு பாதுகாப்பாளராக நியமித்துள்ளோம். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த மதிப்பெண் எடுக்கவே இந்த முயற்சி. ஒவ்வொரு ஆண்டும் எங்களது கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
முன்பு, அதிக மதிப்பெண் எடுக்கும் முதல் 3 மூன்று மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் உதவித்தொகையாக வழங்கினோம். தற்போது, குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் உதவித்தொகையாக வழங்குகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 230 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரப்பிரசாதம்
ஜெர்மனில் உள்ள பெராரி நிறுவனத்தில் கார் தயாரிக்கும் முறையை, நேரடியாக சென்று காண பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். இது பொருளாதார ரீதியாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அந்நிறுவனத்தின் கார் தயாரிப்பு குறித்த விரிவான 45 நிமிட வீடியோ பதிவு ‘யூடுபிள்’ உள்ளது. இது ஒரு ஆட்டோமொபைல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
உலகின் பல சிறந்த கட்டடங்கள் குறித்த முழுமையான வீடியோக்கள், ஆர்கிடெக்சர் மாணவர்களுக்கான வரப்பிரசாதம். இவ்வாறு, இன்று அனைத்தும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் நிலையை நாம் எட்டியுள்ளோம். அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்பவர்களே சாதிக்கிறார்கள்!
-சாய் பிரகாஷ் லியோ முத்து, சி.இ.ஓ., சாய்ராம் கல்விநிறுவனங்கள், சென்னை.
