தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சரியான தொடக்கமே வெற்றியின் முதல்படி!

சரியான தொடக்கமே வெற்றியின் முதல்படி!

சரியான தொடக்கமே வெற்றியின் முதல்படி!


செப் 12, 2017 12:00 AM

செப் 12, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 12, 2017 12:00 AM செப் 12, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நமக்கு முன்பு வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் பின்பற்றிய பாதையை கவனமாகப் பார்ப்பது நல்ல விஷயம்தான். அதேசமயம், அதே பாதையில் நாமும் சென்றால் தான் வெற்றியை அடைய  முடியும் என்று நினைப்பது சரியான அணுகுமுறையல்ல!

ஏற்கனவே வெற்றி பெற்றவர் தன்னுடைய செயல் திறன், குறிக்கோள் ஆகியவைகளுக்கு ஏற்ப தன் பாதையை அமைத்துக் கொண்டிருப்பார். நமது குறிக்கோள், செயல் திறன் மாறுபட்டிருக்கலாம். நமக்கு எது சரியாக வரும் என்பதை நன்கு சிந்தித்துப் பார்த்து, பாதையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

முன்பு அதே துறையில் வெற்றியடைந்தவர்கள் கடைப்பிடித்த, நமக்கும் பொருந்தக்கூடிய, பின்பற்றக் கூடிய நல்ல விஷயங்களை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கண்ணை மூடிக் கொண்டு மற்றவர்கள் பின்பற்றிய பாதையிலேயே நாமும் சென்றால், முட்டுச் சந்தாகப் போய் முடிந்து விடும்!

ஒரு குறிப்பிட்ட துறையில் தகுதியும் திறமையும் உள்ள மனிதன், அந்தத் துறையையே தேர்வு செய்து தொடர் முயற்சியையும் கடின உழைப்பையும் செலவிட்டால், அவனுக்கு எதிர்படும் தோல்விகள் எல்லாம் புறமுதுகிட்டு ஓடி விடும். இது சத்தியம்!

ஒரு துறையில் சாதிக்க ஆர்வம் மட்டுமே போதாது. அந்தத் துறை பற்றிய தெளிவான அறிவும், அதில் செயல்படுத்தி செல்லும் திறனும், ஓரளவாவது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துறையைத் தேர்வு செய்து தான் முயற்சியைத் தொடங்க வேண்டும்!

‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போல் சிறந்த பாடகராக ஆக வேண்டும்’ என்று ஆசைப்படும் ஒருவரது குரல், கீச்சுக் குரலாக, சாரீர வளம் இல்லாது இருந்தால், அந்த துறையைத் தேர்ந்தெடுப்பது அவருக்கு எப்படி பொருத்தமாக இருக்கும்? நல்ல வியாபாரிக்குப் பேச்சுத் திறமை அவசியம். பேசினால் முத்து உதிரும் என்று சொல்வார்களே... ஒருவர் பிறப்பிலேயே அந்த ரகமாக இருந்தால், எப்படி சிறந்த வியாபாரியாக அவரால் பிரகாசிக்க முடியும்?

முதலில் ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் திறமையைக் கண்டுபிடிக்க வேண்டும்! அவர் முன்னேற தேர்ந்தெடுக்கும் துறை அவரது திறமையைப் பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு உள்ள துறையா என்று ஆய்வு செய்த பின் அந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின், உழைப்பு, திறமை அனைத்தையும் அதில் காட்டுவதே புத்திசாலித்தனம்!

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு! முதல் என்பது தொடக்கம். தவறான துறையை தொடக்கத்தில் தேர்வு செய்து, அதற்காக தங்கள் உழைப்பு நேரம் எல்லாம் செலவு செய்வது விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடும்!

எனவே, முதலில் சரியான தொடக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வெற்றியின் முதல்படியே நல்ல ஆரம்பத்தில் தான் இருக்கிறது! 

-துடுப்பதி ரகுநாதன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us