தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐ.ஐ.பி.எம்., - ஓர் சிறப்பு கல்வி நிறுவனம்’

ஐ.ஐ.பி.எம்., - ஓர் சிறப்பு கல்வி நிறுவனம்’

ஐ.ஐ.பி.எம்., - ஓர் சிறப்பு கல்வி நிறுவனம்’


அக் 17, 2017 12:00 AM

அக் 17, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 17, 2017 12:00 AM அக் 17, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தோட்டக்கலை துறையை மேலாண்மை கல்வியுடன் இணைத்து, நவீன பயிற்சியுடன் கூடிய சிறந்த கல்வியை வழங்குகிறது, ‘இந்தியன் இன்ஸ்டிடிட் ஆப் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட்’!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் இக்கல்வி நிறுவனம், மத்திய அரசின் கீழ் 1993ம் ஆண்டு தன்னாட்சி கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது. செயல்முறையிலான ஆராய்ச்சி கல்வியை கற்பிப்பது, மேலாண்மை மற்றும் வேளாண் துறையில் மாணவர்களை சிறந்த தொழில் முனைவோராக உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

செயல்பாடுகள்
பிளான்டேஷன் மற்றும் அக்ரி பிசின்ஸ், மேலாண்மை கல்வி மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பிரிவுகளில், ஆழமான ஆராய்ச்சி கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, பல்வேறு பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

மேலும், பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, தொழில்துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சித் திட்டங்களையும், செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது!

சிறப்பு படிப்பு
பி.ஜி.டி.எம்.,- ஏ.பி.பி.எம்., (போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் - அக்ரி பிசினஸ் அண்ட் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட்): இரண்டு ஆண்டுகள் கொண்ட இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில், மேலாண்மை நிதி கணக்கியல்,  மேலாண்மை தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை பொருளாதாரம், உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் மேலாண்மை, சந்தைப்படுத்தல், மனிதவள மேலாண்மை, தோட்டம் மற்றும் விவசாய உற்பத்தி, வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மற்றும் கிராமப்புற விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில் விரிவான செயல்முறை பயிற்சிகளுடன் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.

இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது தொழில்துறையில் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

கால அளவு: ரெசிடென்ஷியல் படிப்பாக வழங்கப்படும் இப்படிப்பின் காலஅளவு 24 மாதங்கள்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ‘கேட்’, ‘மேட்’, ‘ஏ.டி.எம்.ஏ.,’ மற்றும் ‘சிமேட்’ போன்ற ஏதேனும் ஒரு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கை முறை: மாணவர்களின் கல்வி செயல்பாடுகள், தேர்வு மதிப்பெண்கள், எழுத்து தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பி.ஜி.டி.எம்.,-எப்.பி.எம்.பி.,

இந்தியாவில் வளர்ந்துவரும் மிகப் பெரிய துறைகளில் ஒன்று புட் புராசசிங்! இத்துறையில் உள்ள உற்பத்தி, வளர்ச்சி, நுகர்வு மற்றும் ஏற்றுமதி நுட்பங்களை கற்றுத் தரும் சிறந்த படிப்பு பி.ஜி.டி.எம். - எப்.பி.எம்.பி., எனப்படும் ‘போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் -  புட் புராசசிங் அண்ட் பிசினஸ் மேனேஜ்மெண்ட்’!

தேவைகள் அதிகம் நிறைந்த துறைகளில் இதுவும் ஒன்று என்பதால் படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பது எளிது.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்பில், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல், ஊட்டச்சத்து, மீன் வளர்ப்பு, பால், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.  மேலும், ‘கேட்’, ‘மேட்’ ‘ஏ.டி.எம்.ஏ.,’ மற்றும் ‘சிமேட்’ போன்ற ஏதேனும் ஒரு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: தகுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், கல்வி செயல்பாடுகள், எழுத்து தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எம்.பி.ஏ.,
ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற முழு நேர முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்பு. இப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, வணிகத் துறைகளில் உள்ள நுணுக்கங்களையும், தகுந்த நேரத்தில் எவ்வாறான பயனுள்ள முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்கும் விதமாக பாடத்திட்டங்கள் வடிவமைத்து கற்றுத்தரப்படுகிறது.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீத தளர்வு உண்டு. ‘கேட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

டீ-டேஸ்டிங் மற்றும் மார்க்கெடிங் படிப்பு:

இது ஒரு புரொபஷனல் சான்றிதழ் படிப்பாகும். டீ தொழில் சம்பந்தமான, நவீன வணிக மேலாண்மை கொள்கைகள், சந்தை தகவல், நுட்பங்கள் மற்றும் டீ டேஸ்டிங் திறன் பயிற்சிகள் போன்றவை, மேலாண்மை திறனுடன், உலக தரத்திலான டீ டேஸ்டிங் நிபுணர்களை உருவாக்கும் விதமாக, பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கால அளவு: 45 நாட்கள் படிப்பாக வழங்கப்படுகிறது.

தகுதிகள்: யு.ஜி.சி.,யால், அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில், நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: டீ டேஸ்டிங் தொடர்பான, சைக்கோமெட்ரிக் சோதனை மற்றும் ப்ளைண்ட் (சென்சரி) சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எப்.பி.எம்., -ஏ.பி.பி.எம்., (பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் - அக்ரிபிசினஸ் அண்ட் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட்):

முழு நேரம் கொண்ட ரெசிடென்ஷியல் ஆராய்ச்சி படிப்பாகும். வேளாண் வணிகம் மற்றும் சரக்கு துறைகளில், ஆராய்ச்சி மாணவர்களை, சிறந்த வல்லுநர்களாக உருவாக்குவதே இப்படிப்பின் நோக்கம்.

கால அளவு: குறைந்தபட்சம் 4 ஆண்டுகள்; அதிகபட்சம் 6 ஆண்டுகள்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சி.ஏ., ஐ.சி.டபல்யூ.ஏ., மற்றும் சி.எஸ்., படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ’கேட்’, ’மேட்’, ’நெட்’, ’ஜி.ஆர்.இ’ போன்ற ஏதேனும் ஒரு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கை முறை: நேர்காணல் மற்றும் தனிப்பட்ட விவாதங்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

உதவித்தொகை: அனைத்து படிப்புகளுக்கும், மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படும்.

விபரங்களுக்கு: www.iipmb.edu.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us