தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அழுவதா? எழுவதா?

அழுவதா? எழுவதா?

அழுவதா? எழுவதா?


அக் 23, 2017 12:00 AM

அக் 23, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 23, 2017 12:00 AM அக் 23, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிறக்கும் போதும் அழுகின்றோம். இறக்கும் போதும் அழுகின்றோம். இடையில் தான் தான் எத்தனை சம்பவங்கள்? எத்தனை சவால்கள்?

எது நடந்தாலும் ஆணோ பெண்ணோ சமாளித்து எழுவதா? எண்ணி எண்ணி அழுவதா? எது சிறப்பு என்பதே இங்கு கேள்வி. இதயமே! தாங்காத இடர்கள் வரத் தான் செய்யும். இடையூறுகள், ஏமாற்றங்கள், ஏளனங்கள், அவமானங்கள், பற்பல மனதை அசைக்கும் சவால்கள் எல்லாம் கூட வரும். வழியில்லாத ஊரே இல்லை. வலியில்லாத வாழ்வே இல்லை!

இலைகள் உதிரும். பிறகு புதிய இலைகள் முளைக்கும். இது பருவங்களின் மாற்றம். இருள் சூழும். பிறகு கதிர் வந்து வெளிச்சம் பரப்பும். மாறுகின்ற வானிலை போல மாறுகின்ற மனநிலை தான். எதுவுமே நிரந்தரம் அல்ல! இதில் இடர்களும் அடங்கும். அப்போது காலில் அடிபட்டால் கண்களில் நீர் வருவது போல, மனம் வலித்தாலும் கண்களில் நீர் வரும். இதில் பெண் என்றும் ஆண் என்றும் பேதம் கிடையாது!

ஆண்கள் அழுதிடக் கூடாது என்று அனைவரும் சொல்வதால் சிலர் இருட்டில், சிலர் குளிக்கையில், சிலர் கோவிலில் அழுகிறார்கள். அடக்கி வைக்கும் எந்த உணர்வும் எங்கோ ஒரு வலியாக வேதனையாக கோபமாக நோயாக வெளிப்படும். இது உண்மை.

இன்று மதிப்பெண் குறைந்து விட்டால், தேர்வில் தவறி விட்டால், கல்லூரி அட்மிஷன் கிடைக்காவிட்டால், காதல் தோல்வியுற்றால், வேலை கிடைக்கவில்லை என்றால் என்பது தாண்டி திருமணம் ஆகவில்லை, மனைவி அல்லது உயரதிகாரியின் ஏச்சு பேச்சுக்கள் இவற்றுக்கு அழுகிற ஆண்களை நாள்தோறும் ஏதோ விதத்தில் சந்திக்க நேரிடுகிறது!

பிக்பாஸ் போன்ற நிகழ்வுகளில் நடிகர் வையாபுரி, கவிஞர் சினேகன் ஆகியோர் சில சந்தர்ப்பங்களில் அழுவதைக் கண்டோம். இயலாமையின் வெளிப்பாடே இந்த அழுகை. தமக்குத் தாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் ஒரு வழிவகையே அழுகை!

அழுவது, புலம்புவது, எல்லோரிடமும் தமது சிரமங்களை எடுத்துச் சொல்லி சுய பச்சாதாபம் தேடுவதே தவறு. அழுவது தவறு அல்ல! அழுகையைக் கடந்து, அடுத்து என்ன செய்யலாம், எப்படி இந்த சவாலை, சூழலை, மக்களை சமாளிக்கலாம் என்று சிந்தித்து முன்னேறுவது தான் எவருமே எதிர்பார்க்கும் நல்ல பண்பு அல்லது திறன். இந்த திறனை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அழுபவர்கள் எல்லாம் பலவீனமானவர்கள் இல்லை என்பது தான் நிதர்சன உண்மை. தாங்கொணா துயர் வரும் போது அவற்றை சமாளித்து தானே உவந்து முடிச்சுகளை அவிழ்த்து முன்னேற வேண்டும். ஆணோ, பெண்ணோ இருபாலருக்கும் இது பொருந்தும். ஆகவே, மனவலிமை, தெளிவு, உணர்வுகளை கையாளும் சாமர்த்தியம், துணிவு, முடிவெடுக்கும் திறன், இவற்றை எல்லோருமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது என்றும் எதிலும் வெற்றி நிச்சயம்!

-முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us