அக் 31, 2017 12:00 AM
அக் 31, 2017 12:00 AM
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு நவீனத்துவம் கொண்ட கல்வி திட்டங்களை வடிவமைத்து, தரமான வகுப்பறை மற்றும் செயல்முறை கல்வியைவழங்குகின்றன, கேன்டர்பரி பல்கலைக்கழகம் மற்றும் வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்!
தனித்துவம்
விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பட்டப்படிப்பு திட்டத்தின்படி, இளநிலை இரண்டாம் ஆண்டில், கட்டடக்கலை, உயிரி மருத்துவ அறிவியல், கட்டட அறிவியல், கலை, வணிகவியல், வடிவமைப்பு, கல்வியியல், பொறியியல், சட்டம், இசை, அறிவியல் மற்றும் சுற்றுலா மேலாண்மை போன்ற ஏதேனும் ஒரு படிப்பை கூடுதலாக, தேர்வு செய்து படிக்கலாம். தவிர, இரட்டை பட்டப்படிப்பு எனும் ‘டபுள் டிகிரி’ படிப்பையும் இங்கு மேற்கொள்ளலாம்.
கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் செயல்படும் ‘என்ரோல் இனோவேட்டிவ் புரொக்ராம்’ மற்றும் ‘வைபரன்ட் ஸ்டூடன்ட் கம்யூனிட்டி’ திட்டங்களில், கள பயிற்சிகள் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தப்படுகின்றன. மேலும், வணிகவியல், கலை அறிவியல், சட்டம், குற்றவியல் போன்ற துறை பிரிவில் இரட்டை பட்டப்படிப்புகளும், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் வணிகவியல், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் அறிவியல் ஆகிய பாடப்பிரிவில் இணைப்பு பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
படிப்புகள்
கேன்டர்பரி பல்கலைக்கழகம்: கலை, வணிகவியல், குற்றவியல், பொறியியல், நுண்கலை, வனவியல், சட்டம், சமூகப் பணி, இசை, அறிவியல் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு.
விக்டோரியா பல்கலைக்கழகம்: கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு, வணிகம், கல்வியியல், பொறியியல், சட்டம், அறிவியல், சுகாதாரம், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல்.
மொழிப் புலமைத் தேர்வு
இளநிலை பட்டப்படிப்புக்கு, ஆங்கில மொழி புலமைத் தேர்வான ஐ.இ.எல்.டி.இ.எஸ்., தேர்வில் 6.0 மதிப்பெண்ணுக்கு மேல் அல்லது டோபல் தேர்வில் 80 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கு ஐ.இ.எல்.டி.இ.எஸ்., தேர்வில் 6.5 மதிப்பெண்ணுக்கு மேல் அல்லது டோபல் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும்.
உதவித்தொகைகள்
புல்பிரைட் கல்வி நிதி உதவி, பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலஷிப் மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை உள்ளிட்ட நிதி உதவிகள் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: www.victoria.ac.nz www.canterbury.ac.nz
