தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பெட்ரோலிய ஆராய்ச்சி நிறுவனம் - ஐ.ஐ.பி.,!

பெட்ரோலிய ஆராய்ச்சி நிறுவனம் - ஐ.ஐ.பி.,!

பெட்ரோலிய ஆராய்ச்சி நிறுவனம் - ஐ.ஐ.பி.,!


நவ 15, 2017 12:00 AM

நவ 15, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 15, 2017 12:00 AM நவ 15, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் (ஐ.ஐ.பி.,) 1960ம் ஆண்டு உத்ரகாண்ட் மாநிலம், டெஹ்ராடூனில் துவங்கப்பட்டது.

முக்கியத்துவம்
பெட்ரோலிய சுத்திகரிப்பு, ரசாயனம், ஆற்றல் தயாரிப்பு, எரிபொருள், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் ஹைட்ரோகார்பன் ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை இக்கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும், பெட்ரோல் தொடர்புடைய துறைகளுக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வு சேவைகளையும், அவற்றை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் இந்நிறுவனம் வழங்கி வழங்குகிறது!

ஆராய்ச்சி பிரிவுகள்
அனலட்டிக்கல் சயின்சஸ், ஆட்டோமேட்டிவ் பியூல் அண்ட் லூப்ரிகண்ட் அப்ளிகேஷன் டிவிசன், பையோ ப்யூல்ஸ், கன்வர்சன்ஸ் அண்ட் கேட்டலிசிஸ், கெமிக்கல் சயின்சஸ், செப்ரேஷன் ப்ராசஸ், டிரிபோலஜி ஆகிய ஆராய்ச்சி பிரிவுகளின்கீழ், தொழில்துறைக்கென பிரத்யேக தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயிற்சிகள்
பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழில்நுட்பம், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் மற்றும் இண்டஸ்ட்ரி மெஷின்களில் எரிபொருள்களின் பயன்பாடு, இயந்திர எரிபொருள், தர தேவைகள், வாகன மாசு, சி.எப்.ஆர்., இன்ஜின்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு, எஸ்.ஐ., இன்ஜின் உபகரணங்களின் மதிப்பீடு, பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் தயாரிப்பு பகுப்பாய்வு, எரிபொருள் எண்ணெய் திறன் பயன்பாடுகள் உள்ளிட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழில்துறைக்கான அனைத்து பயிற்சிகளும், முழு நேர படிப்புகளாக வழங்கப்படுகின்றன.

மேலும், பி.இ., பி.டெக்., எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., போன்ற பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆறு மாதங்கள் கொண்ட இன்டர்ன்ஷிப் வாய்ப்பு, கோடைக்கால பயிற்சி மற்றும் புராஜெக்ட் பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

படிப்புகள்
இந்நிறுவனத்தில் செயல்படும், அட்வான்ஸ்ட் பெட்ரோலியம் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (ஏ.பி.எஸ்.டி.,) துறையில், ரசாயன அறிவியல், உயிரியல் அறிவியல் மற்றும் இரசாயன பொறியியல் ஆகிய மூன்று பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.

அறிவியல் அல்லது பொறியியல் தொழில்நுட்ப படிப்பில் தேர்ச்சி பெற்று, ஜே.ஆர்.எப்., யு.ஜி.சி.,-நெட், கேட் போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விபரங்களுக்கு: www.iip.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us