தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மேலாண்மை நுழைவுத்தேர்வுகள்!

மேலாண்மை நுழைவுத்தேர்வுகள்!

மேலாண்மை நுழைவுத்தேர்வுகள்!


டிச 19, 2017 12:00 AM

டிச 19, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 19, 2017 12:00 AM டிச 19, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘ஏ.டி.எம்.ஏ.,’
எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., மற்றும் பி.ஜி.டி.பி.ஏ., போன்ற படிப்புகளை பி-ஸ்கூல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் தொடர விரும்பும் மாணவர்கள், ஏ.டி.எம்.ஏ.,  தகுதித் தேர்வை எழுதலாம்.

இந்திய மேலாண்மைப் பள்ளிகள் சங்கம் (ஏ.ஐ.எம்.எஸ்.,) சார்பில் ஏ.டி.எம்.ஏ., எனப்படும் ‘ஏஐஎம்எஸ் டெஸ்ட் பார் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட்’ நடத்தப்படுகிறது.

தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு: மூன்று மணி நேரம் கொண்ட இத்தேர்வில் அனலடிக்கல் ரீசனிங், குவான்டிடேடிவ் மற்றும் வெர்பல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். அனைத்து கேள்விகளும் ‘மல்டிபில் சாய்ஸ்’ அடிப்படையில் இடம்பெறும்.

விபரங்களுக்கு: www.atmaaims.com

‘டான்செட்’
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் உள்ள மாணவர் இடங்கள் ’டான்செட்’  எனும் பொது நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பல தனியார் கல்வி நிறுவனங்களும் ‘டான்செட்’ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்குகின்றன.

தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: www.annauniv.edu

இதர தேர்வுகள்
தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வு, ஆந்திர பிரதேசம் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வு, கர்நாடகா மேலாண்மை தேர்வு, ஒடிசா பொது நுழைவுத் தேர்வு மற்றும் மகாராஷ்டிரா பொது நுழைவுத் தேர்வு போன்றவை மாநில அளவில் நடைபெறும் எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வுகள்.

இவை தவிர, நிகர்நிலை பல்கலை மற்றும் தன்னாட்சி கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்புகளுக்கு, ஐ.பி.சேட்., ஐ.ஐ.எப்.டி., எம்.ஐ.சி.ஏ., எச்.பி.யு., - மேட்., மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் நேஷனல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us