ஜன 12, 2018 12:00 AM
ஜன 12, 2018 12:00 AM
ஏராளமான தொழில்நுட்பங்கள், குழந்தைகளின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது, என்ற பொதுவான கருத்து நிலவிவரும் நிலையில், அத்தகைய கருத்து தவறாக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர், ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள்!
டி.வி., கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட்போன், டேப் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தும் மாணவர்களின் பன்திறன் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்தல், நண்பர்களுடன் விளையாடுதல் போன்றவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
எனினும், தொழில்நுட்ப பயன்பாட்டில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளதையும், அவர்கள் கண்டறிந்துள்ளனர். மாணவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், மாணவிகள் இதர திறன் வளர்ப்பு செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக கூறுகின்றனர்.
குழந்தைகள் தங்களது திறன் வளர்ப்பிற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கை பிரகாசமாகும் என்பது நிதர்சனம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்!
