தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங்


ஜன 17, 2018 12:00 AM

ஜன 17, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 17, 2018 12:00 AM ஜன 17, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக பொருளாதார நிலைகளை கணக்கிட்டு, வேளாண் தொழில்யுத்திகளை அதற்கேற்ப பின்பற்றி, வேளாண்மை வணிக சந்தையில் சாதிக்கும் திறன்களை கற்றுத்தரும் தேசிய கல்வி நிறுவனம் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங்’!

இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயல்படும் இக்கல்லூரி, இந்திய அரசால் 1988ம் ஆண்டு ஜெய்பூரில் தோற்றுவிக்கப்பட்டது. வேளாண்மை துறையில் உள்ள வேளாண் சந்தைப்படுத்துதல் (அக்ரிகல்சர் மார்கெட்டிங்) எனும் பிரிவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிறுவனம், 32 ஏக்கர் பரப்பளவில், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், இரண்டு தகவல் தொழில்நுட்ப கணினி மையங்கள், நூலகம் மற்றும் கருத்தரங்க மையம் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது.

மூன்று மையங்கள்

1. வேளாண் சந்தை வடிவமைப்பு மற்றும் மேலாண்மை மையம்

இம்மையத்தில், வேளாண் சந்தைகள் பற்றி திட்டமிடல், அதனை வடிவமைக்கும் விதம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாய சந்தை உள்கட்டுமானத்தை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல், விவசாய உற்பத்திகளை மின் - வணிகம் (இ-காமர்ஸ்) மூலம் மேம்படுத்துதல் போன்றவை இம்மையத்தில் கற்பிக்கப்படுகிறது.

2. தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ச்சி மையம்

‘அக்ரி பிசினஸ்’ துறையில் தொழில் முயற்சியை மேம்படுத்துவது, விவசாயம் மற்றும் அதன் துணைத் துறைகளிலும் பயிற்சியளித்தல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்கிறது.

3. பொருள் விலை மற்றும் பரிவர்த்தனை மேலாண்மை மையம்

சந்தை நிலவரங்களை தகவல் சேகரிப்பு மூலம் பெறுதல், ஐ.சி.டி., மூலம் தகவல் பரிமாற்றம் செய்தல் மற்றும் சந்தை பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்துவது குறித்த தொழிற்பயிற்சிகள் இம்மையத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், வேளாண் சந்தைப்படுத்தலில் பயிற்சியளித்தல், விரிவாக்குதல் மற்றும் ஆராய்ச்சிகள் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

முக்கிய பங்கு

வேளாண்மை சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு பயிற்சி அளித்தல் கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோருக்கு ஆலோசனை வழங்குதல், ‘ஸ்பான்சர்’ செய்யும் நிறுவனங்களுக்காக ஆலோசனை ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்ளுதல், சர்வதேச அளவிலான கொள்கை முடிவுகளில் உதவி புரிதல் மற்றும் விவசாயிகளுக்கு உதவுதல் போன்றவை இந்நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கைகள்.

படிப்பு

அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அங்கீகாரம் பெற்ற, போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட்- அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம்.,-ஏ.பி.எம்.,) எனும் 2 ஆண்டுகள் கொண்ட முழு நேர பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

தகுதிகள்: வேளாண்மை மற்றும் வேளாண்மை தொடர்புடைய ஏதேனும் இளநிலை அறிவியல் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

‘கேட்’ /‘சிமேட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு, மற்றும் குழு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விபரங்களுக்கு: www.ccsniam.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us