ஜன 26, 2018 12:00 AM
ஜன 26, 2018 12:00 AM
‘தற்போதுள்ள அளவுக்கு அதிகமான பாடங்களால் ஆசிரியர்களால் உண்மையான கல்வியை போதிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
ஆதலால், சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களில், 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட வேண்டியது அவசியம்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது!
‘அனைத்து வாரிய கல்வித் திட்டத்திலும், அளவுக்கு அதிகமான பாடங்கள் இடம்பெற்றுள்ளதால், ’போர்ஷன்’ முடிப்பதற்கே ஆசிரியர்களுக்கு நேரம் போதவில்லை. அதனால், மாணவர்கள் மீதும், அவர்களின் கல்வி கற்கும் திறன் மீதும் ஆசிரியர்களால், உரிய கவனம் செலுத்த முடியாத நிலையே நிலவுகிறது என்றும், தீவிரவாதத்திற்கும், புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கும் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டிய களமான பள்ளியை முறையாக கட்டமைக்க, நாட்டில் உள்ள அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இதுதான்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளார், டில்லி துணை முதல்வரும், அம்மாநில கல்வி அமைச்சருமான மனீஷ் சிஷோடியா.
