தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஈவென்ட் மேனேஜ்மென்ட்

ஈவென்ட் மேனேஜ்மென்ட்

ஈவென்ட் மேனேஜ்மென்ட்


ஏப் 30, 2018 12:00 AM

ஏப் 30, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 30, 2018 12:00 AM ஏப் 30, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும், அதிக வேலை வாய்ப்பை அள்ளித் தரும் வெற்றிகரமான துறைகளின் ஒன்று, ஈவென்ட் மேனேஜ்மென்ட்!

சிறிய அளவிலான பிறந்தநாள் விழாவோ அல்லது பிரம்மாண்டமாக நடைபெறும் விருது வழங்கும் விழாவோ, நிதானமாகவும், நேர்த்தியாகவும் அந்த விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும். அவ்வாறு, நிகழ்ச்சியை அழகாக ஒருங்கிணைத்து, திறமையாக நடத்துவது எப்படி? என்பது மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த படிப்பின் மூலம் கற்றுத்தரப்படுகிறது. 

என்ன கற்கலாம்?: முழு நிகழ்ச்சியையும் முதலில் மனதளவில் ’விஷ்வலைஸ்’ செய்து பார்த்து அதற்கேற்ப வழிமுறைகளை வகுத்து, உணவு, கலை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் கொடுக்கப்படும் பட்ஜெட்டிற்குள் நடத்தி முடிக்கும் யுக்தியை இந்த படிப்பில் கற்கலாம். ஈவென்ட் மேனேஜ்மென்ட் குறித்த படிப்புகள் முதுநிலை, டிப்ளமோ அல்லது சான்றிதழ் ஆகிய நிலைகளில் கற்பிக்கப்படுகிறது. 

பணி நிலைகள்: மேனேஜ்மெண்ட் இன்சார்ஜ், வாய்ஸ் ஆர்டிஸ்ட், ப்ரோக்ராம் மேனேஜர், பப்ளிக் ரிலேட்ஷன் எக்ஸிக்யூடிவ், கிரியேட்டிவ் டிரக்டர், பினான்ஸ் மேனேஜர், ப்ரோக்ராம் கோ-ஆர்டினேட்டர், மார்க்கெட்டிங் மற்றும் டெக்னிக்கல் டெவலப்பர் என ஆர்வமுள்ள எந்த பணியாளராகவும் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். துறை குறித்த சரியான புரிதல், தொழில் ரீதியான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளுதல், கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தத் துறையில் உங்களுக்கென தனி இடத்தை நிச்சயம் பிடிக்கலாம்.

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்ற யார் வேண்டுமானாலும், ஒரு வருட ’ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இரண்டு வருட எம்.பி.ஏ.,   ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பிலும் சேரலாம்.

இந்தியா முழுவதிலும் பல கல்வி நிறுவனங்கள் இந்தப் படிப்பை வழங்கி வருகின்றன.  அவற்றில் பல கல்விநிறுவனங்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 

முக்கியமான நுழைவுத் தேர்வுகள்:
அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்
ஈவென்ட் மேனேஜ்மென்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்
இன்டர்நேஷனல் சென்டர் பார் ஈவென்ட் மார்கெட்டிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
ஈவென்ட் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், மும்பை
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஈவென்ட் மேனேஜ்மென்ட், மும்பை மற்றும் டில்லி
இன்டர்நேஷனல் சென்டர் பார் ஈவென்ட் மார்கெட்டிங், புதுடில்லி
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் அண்ட் ஈவென்ட்ஸ், மத்திய பிரதேசம்
அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் ஈவென்ட் மேனேஜ்மென்ட், புதுடில்லி
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ரிசர்ச், ஜெய்ப்பூர்

வேலை வாய்ப்பு:
பல்வேறு பொது அல்லது தனியார் துறைகளில் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதைத் தவிர சிறு முதலீட்டில் சுய தொழிலாகவும் துவங்கி இதில் ஜொலிக்கலாம். விளம்பர நிறுவனங்கள், ஹோட்டல், பினான்சியல் இன்ஸ்டிடியூட்ஸ், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை தயாரிப்பு நிறுவனங்கள், ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனங்கள் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ஸிகளில் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us