தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘இன்ஜினியரிங் இல்லாமல் எதுவுமில்லை’

‘இன்ஜினியரிங் இல்லாமல் எதுவுமில்லை’

‘இன்ஜினியரிங் இல்லாமல் எதுவுமில்லை’


மே 22, 2018 12:00 AM

மே 22, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 22, 2018 12:00 AM மே 22, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எங்கள் நிறுவனத்தில் நாங்கள் முதலில் முக்கியத்துவம் அளிப்பது ஒழுக்கத்திற்கே! ஒழுக்கத்துடன் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்!

அடுத்ததாக, மாணவர்களுக்கு நாங்கள் தருவது காகித வடிவிலான ‘டிகிரி’ சான்றிதழ் அல்ல; சாதிக்க தேவையான ஒழுக்கம், திறன்கள், அறிவு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய வாழ்க்கைக்கான கருவியையே பட்டமாக வழங்குகிறோம்.

செயல்முறைக் கல்வி
கற்றல், கற்பித்தல் முறை குறித்து, ஸ்டான்போர்டு, எம்.ஐ.டி., போன்ற உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இணைந்து சி.டி.ஐ.ஓ., எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு சரியான கற்றல், கற்பித்தல் முறையை பரிந்துரைசெய்துள்ளது. இந்த அமைப்பில், எங்கள் கல்வி நிறுவனமும் உறுப்பினராக இடம்பெற்றுள்ளது. இதனால், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பாடங்கள், கற்பிக்கப்படும் முறை எங்கள் நிறுவனத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.

அடிப்படை பாடங்களோடு, நவீன பாடத்திட்டத்தையும் சேர்த்து கற்பிக்கிறோம். இன்றைய காலகட்டத்தில், செயல்முறை வடிவில் பாடங்களை கற்பிப்பது என்பது மிக அவசியமானது. இதை உணர்ந்து, செயல்முறைக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதால், முதலாம் ஆண்டு மாணவர்கள் கூட ரோபோட்டிக்ஸ், பிக் டேட்டா, கிளவுட் கம்ப்யூட்டிங் உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்பத்தில் திறம்பட செயல்படுகின்றனர். தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று சாதனையும் படைக்கின்றனர்.

ஊக்கமும், பயிற்சியும்
மாணவர்கள் தனித்துவமிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சியும் ஊக்கமும் அளிக்கிறோம். தற்போது, தைவான், ஜெர்மன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளுடனான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களிலும் எங்கள் கல்விநிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதில், மாணவர்களும் அதிகளவில் பங்கேற்க வாய்ப்புகளை வழங்குகிறோம்.

சிறந்த கல்வி நிறுவனங்களில் வேலை பெற தேவையான தகுதிகளையும், திறன்களையும் பெற்றவர்களாகவும் மாணவர்களை ஊக்குவிக்கும் அதேவேளை, தொழில்முனைவோராகி பிறருக்கு வேலை வழங்கவும் பெருந்துணை புரிகிறோம். ஏனெனில், மக்களை சுயமாக வருமானம் ஈட்ட, அவர்களுக்கு உதவுவதுதான் உண்மையான சேவை! இவ்வாறு, பல்வேறு நிலைகளில் சிறப்பாக செயல்படுவதால், கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அமைப்புகள் வழங்கும் அனைத்து முக்கிய அங்கீகாரத்தையும் எங்கள் கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. இவைதவிர, சர்வதேச தரவரிசையிலும் இடம் பிடித்துள்ளோம்.

இன்ஜினியரிங் முக்கியத்துவம்
சமீபகாலங்களாக, சோசியல் மீடியா மற்றும் சினிமாக்களில் இன்ஜினியரிங் படிப்பு குறித்து எதிர்மறையான தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஆனால், இன்ஜினியரிங் தொழில்நுட்பம் இல்லாமல் உலகம் ஒரு நாள் கூட இயங்கமுடியாது. மருத்துவம் முதல் எந்த துறையாக இருந்தாலும், இன்ஜினியரிங் துறையின் பங்களிப்பு மிக அவசியம்!

-கே.வி.டி. கிஷோர் குமார், துணை தலைவர், வேல்டெக் கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us