தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புற்றீசல்கள் போல பெருகும் ‘நீட்’ பயிற்சி மையங்கள்!

புற்றீசல்கள் போல பெருகும் ‘நீட்’ பயிற்சி மையங்கள்!

புற்றீசல்கள் போல பெருகும் ‘நீட்’ பயிற்சி மையங்கள்!


ஜூலை 02, 2018 12:00 AM

ஜூலை 02, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 02, 2018 12:00 AM ஜூலை 02, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் அதிகரிப்பால், விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இன்று எளிதாக இன்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைக்கிறது. ஆனால், படித்து முடித்து இன்ஜினியரிங் பட்டம் பெறும் அனைவரும், தேவையான வேலைவாய்ப்பு திறன்களை பெற்றிருப்பதில்லை!

அனைவருக்கும் வேலை கிடைக்காததால், இன்ஜினியரிங் படிப்பு சற்று சரிவடைந்ததுபோல் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லூரிகள் பெருகிவிட்டநிலையில், குறைந்தபட்சம் அனைத்து கல்லூரிகளிலும், இன்ஜினியரிங் ‘சீட்’களை குறைக்க, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். மாணவர்களும், படிக்கும்போதே வேலைக்கு தேவையான திறன்கள், துறை சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு வரை, தமிழகத்தில் பிளஸ் 1 பாடங்களை படிக்காமல், பிளஸ் 2 பாடங்களை மட்டுமே படித்து, தேர்ச்சி பெற்று, கல்லூரிகளுக்கு சென்றநிலை நீடித்தது. பிளஸ் 1 பாடங்களில் உரிய கவனம் செலுத்தாமல், பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் பலர், அப்பாடத்தை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறியதையும் பார்க்க முடிந்தது. பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் தான், அந்த நிலை இருந்தது.

தமிழக அரசு தற்போது பிளஸ் 1 ஆண்டுத் தேர்வையும், பொதுத்தேர்வாக நடத்துவதால், இந்தநிலை தற்போது மாறியுள்ளது; இதுவரவேற்கத்தக்கது! மேலும், ‘நீட்’ மற்றும் ஜே.இ.இ., தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற பிளஸ் 1 பாடத்தை கட்டாயம் மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், மற்றொரு சவால் எழுந்துள்ளது. அதுதான் ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுக்கான, பயிற்சி (கோச்சிங்) மையங்கள்!

பெற்றோர் மற்றும் மாணவர்களின் பேரார்வத்தால், புற்றீசல்கள் போல இன்று பயிற்சி மையங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த பயிற்சி மையங்களில் சேர்க்கை பெற்றாலும், மாணவர்கள் தான் படிக்க வேண்டும் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுடன், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எங்களது பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு பாடங்களும் முழுமையாக கற்பிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத்திட்டத்திலான பள்ளிகள் உட்பட மொத்தம் 8 கல்வி நிறுவனங்களை  நடத்துகிறோம். ஒழுக்கம், நற்பண்புகளுக்கு எங்களது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

கல்லூரிகளில், வேலை வாய்ப்புக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு பாடத்திற்கும் முக்கியத்துவம் அளித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அடிக்கடி வகுப்பு தேர்வு நடத்துகிறோம். அவற்றில் தொடர்ந்து, குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெற உரிய பயிற்சியை அளிக்கிறோம். இதுபோன்ற எங்களது தொடர் முயற்சியால், அதிக தேர்ச்சி அளித்த பொறியியல் கல்லூரிகள் பற்றி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், 17வது இடத்தை எங்களது கல்லூரி பெற்றுள்ளது!

-முனைவர் கே.வாசுதேவன், தலைவர், பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us