தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நெஸ்ட் தேர்வு

நெஸ்ட் தேர்வு

நெஸ்ட் தேர்வு


ஜன 20, 2019 12:00 AM

ஜன 20, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 20, 2019 12:00 AM ஜன 20, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

என்.ஐ.எஸ்.இ.ஆர்., அமைப்பால் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளுக்காக தேசிய அளவில் நெஸ்ட் தேர்வு நடத்தப்படுகிறது.
படிப்புகள்:
எம்.எஸ்சி., (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்)
தகுதிகள்:
12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குமதிப்பெண் சதவீதத்தில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும். தற்போது 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
நெஸ்ட் நுழைவுத்தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை:
கணினி வழி தேர்வாக மட்டுமே நெஸ்ட் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் 5 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில் பொதுவான கேள்விகள் கேட்கப்படும், இந்த பகுதியை அனைவரும் எழுத வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கென அடுத்தடுத்த தனி பிரிவுகள் இருக்கும். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப 3 பகுதிகளைத் தேர்வு செய்து பதிலளிக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளும் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாகவே இருக்கும்.
விபரங்களுக்கு:
www.nestexam.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us