தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்


ஏப் 04, 2019 12:00 AM

ஏப் 04, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 04, 2019 12:00 AM ஏப் 04, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமூக அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், அத்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களை உதவித்தொகைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் மூலம் ஊக்குவிக்கவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டதே ‘இந்தியன் கவுன்சில் ஆப் சோசியல் சயின்ஸ் ரிசர்ச்’ (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்.,) எனும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்.
அறிமுகம்:
மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ், 1969ம் ஆண்டு வைக்கப்பட்ட இந்த கழகமானது, சமூக அறிவியல் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்காகவும், ஆராய்ச்சிக் கல்வியில் ஒரு புதிய தரநிலையை எட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்டது. தற்போது 20க்கும் மேற்பட்ட சமூக அறிவியல் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கான நிதியுதவிகளை இது வழங்கி வருகிறது.
இந்தியா முழுவதும் கிழக்கு, வட மேற்கு, வட கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு என ஆறு இடங்களில் இந்த அமைப்பிற்கான ‘மண்டல மையங்கள்’ அமைக்கப்பட்டு, இத்துறை சார்ந்த பணிகள் நிர்வகிக்கப்படுகிறது. ‘ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., டேட்டா சர்வீஸ்’ என்கிற பிரிவின் கீழ் சமூக அறிவியல் சார்ந்த தகவல்கள் மற்றும் இதுவரை இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து குறிப்புகளும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
முக்கிய செயல்பாடுகள்:
ஒவ்வொரு ஆராய்ச்சிகளையும் மதிப்பாய்வு செய்து, அதில் உள்ள குறைபாடுகளைக் களைய மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது, சமூக அறிவியல் துறையில் குறைந்த கவனம் பெற்ற அல்லது புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பது, கருத்தரங்கம், தொழிற் பட்டறை, விரிவுரைகளின் மூலம் மாணவர்களுக்கு இத்துறையில் உள்ள சந்தேகங்களைத் தீர்ப்பது மற்றும் இதில் உள்ள வாய்ப்புகளை விளக்குவது.
உதவித்தொகைகள்:
மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சிக்கான உதவித்தொகைகளை வழங்குவது இந்த கழகத்தின் முக்கியப் பணிகளுள் ஒன்று. அவை:
 நேஷனல் பெலோஷிப்ஸ் - சமூக அறிவியலில் தன்னிகரற்ற பங்களிப்பை அளித்த ஓய்வுபெற்ற சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது ஆய்வுகளைத் தொடர்வதற்காக வழங்கப்படும் உதவித்தொகை. சீனியர் பெலோஷிப் - 45 முதல் 70 வயதிற்குட்பட்ட பிஎச்.டி., பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை. அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கும் இது வழங்கப்படுகிறது. போஸ்ட்-டாக்டோரல் பெலோஷிப் - 45 வயதிற்குக் குறைந்த தங்கள் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் பிஎச்.டி., பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை. டாக்டோரல் பெலோஷிப் - சமூக அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்ற 40 வயதிற்குக் குறைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இது.
இக்கழகத்தின் கீழ் செயல்படும் பிரபல கல்வி நிறுவனங்கள்:
 ஏ.என். சின்கா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் ஸ்டடீஸ், பாட்னா சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ், திருவனந்தபுரம் சென்டர் பார் எக்னாமிக் அண்ட் சோஷியல் ஸ்டடீஸ், ஹைதராபாத் சென்டர் பார் மல்டி-டிசிப்ளினரி டெவலப்மென்ட் ரிசர்ச், தார்வத் சென்டர் பார் பாலிஸி ரிசர்ச், நியூ டெல்லி தி சென்டர் பார் ஸ்டடீஸ் இன் சோஷியல் சயின்சஸ், கொல்கத்தா சென்டர் பார் தி ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டீஸ், டெல்லி கவுன்சில் பார் சோஷியல் டெவலப்மென்ட், ஹைதராபாத்
விபரங்களுக்கு:
http://icssr.org/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us