மே 31, 2019 12:00 AM
மே 31, 2019 12:00 AM
நாட்டின் பாரம்பரிய இசை, கலைகள், கவின் கலைகள் ஆகியவற்றை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மக்களிடையே பிரபலப்படுத்தவும் தமிழக அரசால் சென்னையில், துவக்கப்பட்ட இசைக்கான பிரத்யேக கல்வி நிறுவனம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்!
முக்கியத்துவம்
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக சட்டம் 2013ன் படி இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இசை மற்றும் கலைகளை நவீன கல்வி மாற்றத்திற்கு ஏற்ப அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில், ஆராய்ச்சி மேற்கொள்வதும், ஆவணப்படுத்துவதும், ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் வெளியிடுவடுதும், இப்பல்கலைக்கழகத்தின் இதர முக்கிய பணிகள்.
பல்கலைக்கழக படிப்புகள்
எம்.ஏ., இசை - பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், நாதஸ்வரம்.எம்.எப்.ஏ., - பெயின்டிங், விசுவல் கம்யூனிகேஷன்பி.ஜி.,டிப்ளமா - டிஜிட்டல் போட்டோகிராபி, விசுவல் கம்யூனிகேஷன்பிஎச்.டி., இவை தவிர, பல்கலைக்கழகத்தின் சார்பில் அவ்வப்போது, பகுதிநேர மற்றும் குறுகியகால பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அரசு கல்லூரிகள்:
தமிழ்நாடு அரசு இசை கல்லூரி, சென்னைதமிழ்நாடு அரசு இசை கல்லூரி, மதுரைதமிழ்நாடு அரசு இசை கல்லூரி, கோவைதமிழ்நாடு அரசு இசை கல்லூரி, தஞ்சாவூர்அரசு கவின் கலை கல்லூரி, சென்னைஅரசு கவின் கலை கல்லூரி, கும்பகோணம்அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி, காஞ்சிபுரம்எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், சென்னைஇவைதவிர, பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் பல அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் செயல்படுகின்றன.
கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள்:
பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்புகள் வழங்கப்படும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், இன்டஸ்டிரியல் டிசைன் இன் செராமிக், இன்டஸ்டிரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல், விசுவல் கம்யூனிகேஷன் டிசைன், சினிமாட்டோகிராபி, பிலிம் எடிட்டிங், அனிமேஷன் அண்ட் விசுவல் எபக்ட்ஸ், பேஷன் அண்ட் ஜுவல்லரி டிசைன், பேஷன் அண்ட் காஸ்ட்யூம் டிசைன், பேஷன் அண்ட் லைப்ஸ்டைல் ஸ்பேஷ் டிசைன், பேஷன் ரீடெயில் மேனேஜ்மெண்ட், பேஷன் கம்யூனிகேஷன், ஹரிடேஜ் கன்சர்வேஷன், நட்டுவாங்கம் உள்ளிட்ட கலை மற்றும் இசை சார்ந்த ஏராளமான படிப்புகள் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா நிலைகளில் வழங்கப்படுகின்றன.
விபரங்களுக்கு:
http://tnmfau.ac.in
