தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆசிரியர்களும் அப்டேட் ஆக வேண்டும்

ஆசிரியர்களும் அப்டேட் ஆக வேண்டும்

ஆசிரியர்களும் அப்டேட் ஆக வேண்டும்


ஜூன் 14, 2019 12:00 AM

ஜூன் 14, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 14, 2019 12:00 AM ஜூன் 14, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘என்னதான் படிச்சாலும் மனசுல ஏற மாட்டேங்குதே... டீச்சர்க்கு என்ன பிடிக்குமா... எங்கிட்ட நல்ல பேசுவாங்களா.. என்னையும் கவனிப்பாங்களா...’ என, ஏங்கும் மனநிலையில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் இன்னமும் இருக்கவே செய்கின்றனர். ஆனால், இதற்கு எங்கள் பள்ளியில் இடமேயில்லை. கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை என்றுமே நாங்கள் தனிமைப்படுத்துவதில்லை.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனிக்கவனம் செலுத்தி வருவதால், முதல் மதிப்பெண் வாங்கும் குழந்தைக்கும் கடைசி மதிப்பெண் எடுக்கும் குழந்தைக்கும் இடைவெளி இருக்காது. எந்த துறையிலும் ஜொலிக்க மொழித்திறன் அவசியம். எனவே, மொழித்திறன் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். மற்ற பள்ளிகளில் வாரத்தில் ஐந்து வகுப்புகள் ஆங்கிலத்திற்கு ஒதுக்கினால், நாங்கள் எட்டு வகுப்புகள் நடத்துகிறோம்.
மாணவர்களின் கவனச்சிதறலை கட்டுப்படுத்த, மனதை ஒருநிலைப்படுத்த யோகா, தியானம், நீதி போதனை வகுப்புகள் எடுக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் ரோல்மாடலாக ஆசிரியர்களை பார்க்கிறார்கள். அந்தவகையில் ஆசிரியர்களை எல்லா வகையிலும் மேம்படுத்த, திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தினமும் ஒரு மணிநேரம் ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம்.
எப்படிப்பட்ட குழந்தைகளையும் படிக்க வைத்துவிடுவோம். அந்தளவுக்கு குழந்தைகளை உளவியல் ரீதியாக அணுகுகிறோம். குழந்தைகளுக்காகவே சிறப்பு மனநல மருத்துவரை நியமித்துள்ளோம். இவரது உதவி தேவைப்படும் குழந்தைகள் எந்த நேரத்திலும் இவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்; கட்டுப்பாடுகள் கிடையாது.
இப்பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும், எந்த சூழலிலிருந்து படிக்க வருகின்றனர். அவர்களின் பின்னணி என்ன, அவர்களுக்கான தேவை என்ன என்பதை தெரிந்து வைத்துள்ளோம். இதனால், குழந்தைகளை அணுகுவதும் அவர்களை மேம்படுத்துவதும் எளிதாக உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் உண்டு. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முக்கிய தினங்களை விழா எடுத்து கொண்டாடுவோம். அதில் மாணவர்களை பங்கேற்கவும் செய்வோம்.
ஒவ்வொரு குழந்தையும், ஓராண்டில் குறைந்தது 5 முறையாவது மேடை ஏறிவிடுவர்; மேடை பயம் காணாமல் போகும். தவிர, டென்னிஸ், நீச்சல், ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் மாநில அளிவில் அசத்தியுள்ளனர். மாணவர்களிடையே ஒற்றுமையை புகுத்த, காலை வழிபாட்டில் அனைத்து மதங்களிலும் கடைபிடிக்கும் வழிபாட்டு முறைகளை சொல்லித்தருகிறோம். 
கடந்த, 1996ம் ஆண்டு பிரீ கே.ஜி., ஆக ஆரம்பித்த இப்பள்ளி இன்று, சமச்சீர், சி.பி.எஸ்.இ., என 2,300 மாணவர்களுடன் செயல்படுகிறோம். காலத்திற்கேற்ப எங்களை, ‘அப்டேட்’ செய்வதும், வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம். இன்றைய தலைமுறையினர், 21ம் நுாற்றாண்டில் உள்ளனர். ஆனால், கற்பிக்கும் ஆசிரியர்களோ, 19 நுாற்றாண்டு பாடத்திட்டங்களை, 20ம் நுாற்றாண்டில் படித்துவிட்டு வந்தவர்கள். எனவே, காலத்திற்கேற்ப ஆசிரியர்கள், ‘ஆப்டேட்’ ஆவதும் நல்லதொரு கல்வியை வழங்க வழிவகுக்கும்.
–நிவேதிகா, நிர்வாகி, கிட்ஸ் கிளப் பள்ளி குழுமம், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us