தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆன்லைன் கவுன்சிலிங் புரிதல் அவசியம்

ஆன்லைன் கவுன்சிலிங் புரிதல் அவசியம்

ஆன்லைன் கவுன்சிலிங் புரிதல் அவசியம்


ஜூன் 29, 2019 12:00 AM

ஜூன் 29, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 29, 2019 12:00 AM ஜூன் 29, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட்-ஆப் மதிப்பெண்களில் பெரும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதும், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திலிருந்து 2,900 ஆக குறைந்துள்ளதும் முக்கிய காரணங்கள். 
கடந்த ஆண்டு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் முறை குறித்த போதிய விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இல்லை என்பதை கடந்த ஆண்டு கவுன்சிலிங் நிறைவில் தெளிவாக இருந்தது. பெற்றோர் மற்றும் மாணவர்களது சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. ஆன்லைன் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான விருப்பப் பட்டியல் தயார் செய்வது என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லூரிகளை தேர்வு செய்யும் முன், கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் மட்டுமின்றி கடந்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளின் கட்-ஆப் மதிப்பெண்களை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது. 
மேலும், மத்திய அரசின் என்.ஐ.ஆர்.எப். ரேங்கிங், நேக் அங்கீகாரம், என்.பி.ஏ., சான்று ஆகியவற்றை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரலாம். எந்த படிப்பை படிக்க போகிறோம் என்பதை முடிவு செய்யும் அதே தருணம், எந்த கல்லூரியில் படிக்க போகிறோம் என்பதும் மிக முக்கியம். இன்று ஆன்லைனில் ஏராளமான வழிகாட்டுதல்கள், கல்வித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு திறன் வளர்ப்பு படிப்புகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு முன்பாக, ஒவ்வொரு மாணவரும் அவரது விருப்பம் எது என்பதில் முதலில் தெளிவு பெற வேண்டும். 
கம்ப்யூட்டர் பாடப்பிரிவிற்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பிற்கு மாணவர்கள் முக்கியத்துவம் தரவில்லை. வரும் காலங்களில் எலக்ட்ரிக்கல் வாகனங்களுக்கு அரசாங்கமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ள நிலையில், அது சார்ந்த படிப்பை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டாதது வருத்தம் அளிக்கிறது. ஏதோ ஒரு ’சாய்ஸ் லிஸ்ட்’ தேர்வு செய்து, ஏதாவது ஒரு படிப்பை, ஏதாவது ஒரு கல்லூரியில் படிப்பது என்பது வரவற்கத்தக்க செயல் அல்ல என்பது எனது கருத்து. 
அதேபோல, பாடப்பிரிவை விட சிறந்த கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ஒரு தரமான கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் இடம் இல்லை என்றால், அந்த கல்லூரியில் இடம் உள்ள மற்ற பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விருப்பப் பட்டியல் தயாரிக்கலாம். ஏனெனில், தரமற்ற கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவை படிப்பதைவிட, தரமான கல்லூரியில் வேறு பாடப்பரிவை படிப்பது சிறந்தது. கடந்த ஆண்டில். விருப்பப் பட்டியல் தயாரிப்பதில் மாணவர்கள் பலரும் செய்த மற்றொரு தவறு, 5 விருப்பத்திற்கு மேல் பல மாணவர்கள் பதிவிடவில்லை. 500 விருப்பப் பாடம் மற்றும் கல்லூரியை பதிவிட வாய்ப்பிருந்தும், 5க்கு மேல் பதிவிடாததால், பல மாணவர்கள் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றும் தரமான கல்லூரியில் சேர்க்கை பெற முடியவில்லை.
சித்தா படிக்கலாம்
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்பிற்கும் நீட் மதிப்பெண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகள் அனைத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு இணையானது என்றும் ஆயுஸ் அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கது. நமது பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சை பெற இன்று பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், சித்தா, ஆயுர்வேதா படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்தது. எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு தனி விண்ணப்பம் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகளுக்கு தனி விண்ணப்பம் என இரண்டு விண்ணப்பிங்களை பூர்த்தி செய்யவேண்டும் என்பதையும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
-சாய் பிரகாஷ் லியோமுத்து, சி.இ.ஓ., சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us