தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
ஜூலை 25, 2019 12:00 AM
ஜூலை 25, 2019 12:00 AM
அ நிறம் | அளவு
உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் இன்று இந்தியாவின் கல்வித் தரம் உயர்ந்து உள்ளது. சர்வதேச நிறுவனங்களின் உயரிய பொறுப்புகள் இந்தியர்களுக்கு வழங்கப்படுவதே இதற்கு சான்று!
தனியார் கல்வி நிறுவனங்கள் இன்றி நமது நாட்டின் கல்வித்தரம் சர்வதேச அளவில் சிறந்த இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. நமது நாட்டு இளைஞர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யவும் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியமாகிறது. இந்த சூழலில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதல் சுதந்திரம் அளிக்கப்படுமேயானால், உலக அரங்கில் இந்தியா வல்லரசாக விளங்கும்.
மேலும் அதற்கு உறுதுணையாக, அறிவியியல் பூர்வமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு எங்கள் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. பல துறைகளில் ஏராளமான படிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தேசிய வளர்ச்சித்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை வளர்ச்சி சார்ந்த திட்டத்தில் நிதி உதவியை பெற்றுள்ளது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் மட்டும் 30 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தங்கள்
டாக்டர் எம்.ஜி.ஆர்., பொறியியல் கல்லூரி மற்றும் தாய் மூகாம்பிகை பல் மருத்துவ கல்லூரி ஆகியவை கடந்த 2003ம் ஆண்டில் மத்திய அரசால், 'டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ என ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, உலக நாடுகளில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வெர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம் - அமெரிக்கா, மீக் சீ தொழில்நூட்ப பல்கலைக்கழகம் - தைவான், நேஷனல் யுன்லின் யுனிவர்சிட்டி ஆப் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி-தைவான், ஆசியா யுனிவர்சிட்டி-தைவான், பைனரி யுனிவர்சிட்டி - மலேசியா, சவுத் அர்ல் ஸ்டேட் யுனிவர்சிட்டி - ரஷ்யா, யுனிவர்சிட்டி ஆப் மெசினா -இத்தாலி போன்ற பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற அரசு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ‘ஸ்டூடண்ட் எக்ஸ்சேஞ் புரோகிராம்’ நடத்தப்படுகிறது.
மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கட்டடக்கலை, பார்மசி, பாலிடெக்னிக் என அனைத்து துறை படிப்புகளும் வழங்கப்படுவதால், எந்த ஒரு மாணவரும் எங்கள் கல்வி நிறுவனத்தில் 'இந்த படிப்பு இல்லை’ என்று கூறி வேறு கல்வி நிறுவனத்திற்கு செல்ல வாய்ப்பில்லை. மேலும், அனைத்து மாணவர்களையும் சமமாக கருதி, அனைவருக்கும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். எந்த ஒரு மாணவரும், ஒன்று தொழில் முனைவோராகவோ அல்லது வேலையுடனோ தான் எங்கள் கல்வி நிறுவனத்தை விட்டு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதோடு, ஒழுக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஒழுக்கத்துடன் செயல்படும் மாணவர்களுக்கு, கல்வியறிவு தானாக வரும்; ஒழுக்கத்தையும், கல்வியறிவையும் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் பல சாதனைகளை புரிவர்!
-ஏ.சி.எஸ். அருண்குமார், தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரவாயல், சென்னை.
