தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பெலிக்ஸ் உதவித்தொகை

பெலிக்ஸ் உதவித்தொகை

பெலிக்ஸ் உதவித்தொகை


நவ 12, 2019 12:00 AM

நவ 12, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 12, 2019 12:00 AM நவ 12, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யு.கே.,வில் உயர்கல்வி கற்க விரும்பும் சிறந்த இந்திய மாணவர்களுக்கு பெலிக்ஸ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெலிக்ஸ் அறக்கட்டளை சார்பில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து இந்திய மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்கள்: 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (எஸ்.ஓ.ஏ.எஸ்.,) - லண்டன் பல்கலைக்கழகம்.
படிப்புகள்: 
முழு நேரமாக எந்த ஒரு துறையிலும் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது டி.பில்., படிப்பு. ஏற்கனவே முதுநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் மீண்டும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பிற்காக இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இயலாது.
உதவித்தொகை விபரம்: 
முழுமையான கல்விக் கட்டணம், இருப்பிடம் மற்றும் உணவுக்காக ரூ.12 லட்சம் வரை, ஒருமுறை இந்தியாவில் இருந்து யு.கே.,விற்கு சென்று வருவதற்கான விமானக் கட்டணம் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 5 மாணவர்கள் வரை இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறலாம்.
தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.* இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க கூடாது. * உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில், கல்விக் காலம் முடிந்தவுடன் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 
உதவித்தொகைக்கு என்று பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஜனவரி மாதத்திற்குள் விரும்பும் பாடத்திட்டத்திற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஜனவரி, 2020ரீடிங் பல்கலைக்கழகம் - ஜனவரி 30, 2020எஸ்.ஓ.ஏ.எஸ்., - ஜனவரி 31, 2020
விபரங்களுக்கு:
 https://www.felixscholarship.org/ 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us